‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் 27 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய சார்பில் நடத்த ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை தொடர்ந்து, 27 விமான நிலையங்களை தற்காலிகமாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீநகர், ஜம்மு, லே, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகர், ஜோத்பூர், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா, ஜாம்நகர், கிஷண்கர், ராஜ்கோட், பிகானீர், குவாலியர் உள்பட வட இந்தியா மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் உள்ள 27 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இதனால் இந்த விமான நிலையங்களை வந்தடையும், புறப்படும் 430 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையங்களுடன், ராஜஸ்தானின் எல்லை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான சேவையை 10-ந் தேதி வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஏற்கெனவே முன்பதிவு செய்தவா்களுக்கு கட்டணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
