பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியது..!

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது. சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை ஆகியவற்றை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

கடந்த கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 434 பொறியியல் கல்லூரிகளில் 1,80,115 இடங்கள் அனுமதிக்கப்பட்டதில், கலந்தாய்வில் 2,00,007 மாணவர்கள் கலந்துகொண்டு, 1, 30, 938 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்தனர். பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பம் சமர்ப்பிக்க இறுதி நாள்:06.2025
  • அசல் சான்றிதழ் பதவியேற்றம் செய்ய இறுதிநாள்:06.2025
  • ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 06.2025
  • சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாள்: 06.2025 முதல் 20.06.2025 வரை
  • தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 06.2025
  • தரவரிசை பட்டியலில் ஏதேனும் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாள்:06.2025 முதல் 02.07.2025 வரை.
  • கலந்தாய்வு தொடங்கும் நாள் ஏஐசிடிஇ நாட்காட்டியின் படி பின்னர் அறிவிக்கப்படும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் www.tngasa.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 05.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.2025
  • குறிப்பிட்ட காலத்திற்குள் மாணவர்கள் தங்கள் விண்ணப்பப் பதிவு மற்றும் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள்:

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த ஆண்டு 7 புதிய பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 570 மாணவர் இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்ப பதிவு தொடங்கும் நாள்: 05.2025
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.2025
  • நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்புகளுக்கும் இதே தேதிகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் கல்விப் பிரிவுகளிலும் சேர விரும்பும் மாணவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்குமாறு உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், விண்ணப்பம் தொடர்பான சந்தேகங்களுக்கு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள உதவி மையங்களை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!