வரலாற்றில் இன்று (மார்ச் 30)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 30 கிரிகோரியன் ஆண்டின் 89 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 90 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 276 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

598 – பால்க்கன் நடவடிக்கை: ஆவார் நாடோடிக் குழு பைசாந்தியப் பேரரசின் முக்கிய நகரமான தோமிசு மீதான முற்றுகையை நிறுத்தினர். அவார்-சிலாவிக் நாடோடிக் குழுக்கள் கொள்ளை நோயினால் பெருமளவில் அழிந்ததைத் தொடர்ந்து அவர்களது தலைவர் முதலாம் பயான் தன்யூப் ஆற்றின் வடக்கே பின்வாங்கினார்.
1296 – இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகியவற்றுக்கிடையேயான சண்டையில், இங்கிலாந்து மன்னர் முதலாம் எட்வர்டு பெரிக் நகரை சூறையாடினார்.
1699 – குரு கோவிந்த் சிங் பஞ்சாபின், அனந்த்பூர் சாகிப் நகரில் கால்சா அமைப்பைத் தோற்றுவித்தார்.[1]
1818 – இயற்பியலாளர் அகசுடீன் பிரெனெல் ஒளியியல் சுழற்சி பற்றிய தனது குறிப்புகளை பிரெஞ்சு அறிவியல் கழகத்தில் படித்தார்.[2]
1822 – ஐக்கிய அமெரிக்காவில் புளோரிடா பிராந்தியம் உருவாக்கப்பட்டது.
1831 – யாழ்ப்பாணம், மானிப்பாயில் அமெரிக்க மிசன் கட்டிடங்கள் தீப்பிடித்து அழிந்தன.
1842 – அறுவைச் சிகிச்சைகளில் முதன்முதலாக ஈதர் மயக்க மருந்து குரோபோர்ட் லோங் என்பவரினால் பயன்படுத்தப்பட்டது.
1851 – ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
1856 – கிரிமியப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது.
1858 – அழிப்பானுடன் கூடிய எழுதுகோலுக்கான காப்புரிமம் ஐமன் லிப்மன் என்பவரினால் பெறப்பட்டது.
1861 – சேர் வில்லியம் குரூக்சு தாலியம் தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
1863 – டென்மார்க்கு இளவரசர் வில்லெம் கியோர்க் கிரேக்கத்தின் ஜார்ஜ் மன்னராக முடிசூடினார்.
1867 – அலாஸ்கா மாநிலத்தை 2 சதம்/ஏக்கர் ($4.19/கிமீ²) என்ற கணக்கில் 7.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு, உருசியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா கொள்வனவு செய்தது.
1912 – மொரோக்கோ பிரான்சின் பாதுகாப்பில் உள்ள ஒரு நாடாக அறிவிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: புதிய சீன பொம்மை அரசின் தலைநகராக நான்கிங் நகரை சப்பான் அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: நேசப் படைகள் பல்காரியா தலைநகர் சோபியா மீது பெரும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டன.
1944 – இரண்டாம் உலகப் போர்: நியூரம்பெர்க் நகரைத் தாக்க அனுப்பப்பட்ட பிரித்தானியாவின் 795 போர் வானூர்திகளில் 95 வானூர்திகள் திரும்பவில்லை.
1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் செஞ்சேனைப் படை ஆஸ்திரியாவின் வியன்னா நகரைக் கைப்பற்றியது; போலந்து, செஞ்சேனைப் படைகள் இணைந்து தான்சிக்கைக் கைப்பற்றின.
1949 – பனிப்போர்: ஐசுலாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. இதற்கு எதிரான கலவரம் ரெய்க்யவிக் நகரில் இடம்பெற்றது.
1965 – வியட்நாம் போர்: சாய்கோன் நகரில் அமெரிக்கத் தூதராலயத்திற்கு முன்னால் தானுந்துக் குண்டொன்று வெடித்ததில் 22 பேர் கொல்லப்பட்டனர்.
1972 – வியட்நாம் போர்: வடக்கு வியட்நாம் படைகள் தெற்கு வியட்நாமின் பாதுகாப்பு வலயத்தினுள் சென்றதை அடுத்து அங்கு போர் மூண்டது.
1979 – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எய்ரி நீவ் என்பவர் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் இருந்து வெளியேறும் போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். ஐரிய தேசிய விடுதலை இராணுவம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
1981 – அமெரிக்க அரசுத்தலைவர் ரானல்ட் ரேகன் வாசிங்டனில் உணவு விடுதி ஒன்றில் வைத்து ஜோன் இங்கிளி என்பவனால் மார்பில் சுடப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.
1982 – கொலம்பியா விண்ணோடம் நியூ மெக்சிகோவில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

பிறப்புகள்

1432 – இரண்டாம் முகமது, உதுமானிய சுல்தான் (இ. 1481)
1566 – கார்லோ கேசுவால்தோ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (இ. 1613)
1709 – ஆனந்த ரங்கம் பிள்ளை, தமிழில் நாட்குறிப்பு எழுதியவர் (இ. 1761)
1746 – பிரான்சிஸ்கோ கோயா, எசுப்பானிய-பிரான்சிய ஓவியர் (இ. 1828)
1853 – வின்சென்ட் வான் கோ, டச்சு-பிரான்சிய ஓவியர் (இ. 1890)
1861 – சுவாமி யோகானந்தர், சுவாமி இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (இ. 1899)
1889 – க. சொர்ணலிங்கம், ஈழத்து நாடகக் கலைஞர் (இ. 1982)
1894 – நிக்கொலாய் பரபாசொவ், சோவியத், உருசிய வானியலாளர் (இ. 1971)
1908 – தேவிகா ராணி, இந்தியத் திரைப்பட நடிகை (இ. 1994)
1925 – தி. க. சிவசங்கரன், தமிழக மார்க்சியத் திறனாய்வாளர் (இ. 2014)
1926 – இங்வர் காம்பரத், சுவீடன் தொழிலதிபர் (இ. 2018)
1930 – கே. ஆர். சோமசுந்தரம், மலேசிய-இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
1936 – சின்னமணி, ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 2015)
1945 – எரிக் கிளாப்டன், ஆங்கிலேய இசைக்கலைஞர், பாடகர்
1966 – விக்ரமன், தமிழ்த் திரைப்பட இயக்குநர்
1979 – நோரா ஜோன்ஸ், இந்திய-அமெரிக்க இசைக்கலைஞர், பாடகி
1984 – சமந்தா ஸ்டோசர், ஆத்திரேலிய டென்னிசு வீராங்கனை
1992 – பாலக் முச்சால், இந்தியப் பின்னணிப் பாடகி

இறப்புகள்

1664 – குரு அர் கிருசன், சீக்கிய நம்பிக்கையின் எட்டாம் குரு (பி. 1656)
1840 – பியூ பிரம்மல், ஆங்கிலேய-பிரான்சிய ஆடை வடிவமைப்பாளர் (பி. 1778)
1951 – நா. பொன்னையா, ஈழத்துப் பத்திரிகையாளர், பதிப்பாளர், சமூக சேவையாளர் (பி. 1892)
1986 – ஜேம்ஸ் காக்னி, அமெரிக்க நடிகர் (பி. [[[1899]])
2002 – ஆனந்த் பக்சி, இந்தியக் கவிஞர் (பி. 1930)
2005 – பிரெட் கோரெமாட்சு, அமெரிக்க அரசியல் செயற்பாட்டாளர் (பி. 1919)
2005 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர், ஓவியர் (பி. 1930)
2015 – இங்கிரிடு கிரோயெனவெல்டு, இடச்சு வானியலாளர் (பி. 1921)
2017 – என். எம். நம்பூதிரி, கேரள வரலாற்று ஆய்வாளர், நூலாசிரியர் (பி. 1943)

சிறப்பு நாள்

நில நாள் (பாலத்தீனம்)
தேசிய மருத்துவர்கள் நாள் (ஐக்கிய அமெரிக்கா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!