வரலாற்றில் இன்று (மார்ச் 28)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

மார்ச் 28 கிரிகோரியன் ஆண்டின் 87 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 88 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 278 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

193 – உரோமைப் பேரரசர் பெர்ட்டினாக்சு பிரடோரியன் காவலர்ககளால் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் அவரது அரியணையை ஏலத்தில் விற்றனர்.[1]
364 – உரோமைப் பேரரசர் முதலாம் வலந்தீனியன் தனது சகோதரன் வேலன்சை துணைப் பேரரசனாக நியமித்தார்.
1737 – மராத்தியர்கள் பாஜிராவ் தலைமையில் முகலாயர்களை தில்லிப் போரில் தோற்கடித்தனர்.
1795 – போலந்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்லாந்து, செமிகாலியா ஆகியன போலந்தில் இருந்து பிரிக்கப்பட்டு உருசியப் பேரரசுடன் சேர்க்கப்பட்டது.
1801 – புளோரன்சு உடன்பாடு: முதல் பிரெஞ்சுக் குடியரசுக்கும் நேப்பிள்சு இராச்சியத்துக்கும் இடையே போர் முடிவுக்கு வந்தது.[2]
1802 – என்ரிக் ஒல்பெர்சு 2 பலாசு என்ற சிறுகோளைக் கண்டுபிடித்தார்.
1809 – மெடெலின் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரான்சு எசுப்பானியாவை வென்றது.
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வால்பரைசோ சமரில் இரண்டு அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
1854 – கிரிமியப் போர்: பிரான்சும் பிரித்தானியாவும் உருசியா மீது போரை அறிவித்தன.
1879 – ஆங்கிலோ-சூலு போர்: பிரித்தானியப் படைகள் ஊலோபேன் நகரில் இடம்பெற்ற சமரில் படுதோல்வியடைந்தனர்.
1910 – கடல் விமானம் ஒன்றில் பறந்த முதலாவது மனிதர் என்ற சாதனையை பிரான்சைச் சேர்ந்த என்றி பாப்ரி என்பவர் பெற்றார்.
1930 – கொன்ஸ்டன்டீனபில், அங்கோரா ஆகியன இஸ்தான்புல் மற்றும் அங்காரா எனப் பெயர் மாற்றம் பெற்றன.
1933 – இம்பீரியல் ஏர்வேய்சு வானூர்தியில் பயணி ஒருவர் தீ மூட்டியதால் விமானம் விபத்துக்குள்ளாகியதில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்தனர்.
1939 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: மூன்று-நாள் முற்றுகையை அடுத்து மத்ரித் நகரை தளபதி பிரான்சிஸ்கோ பிராங்கோ கைப்பற்றினார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் நடுநிலக்கடற்படை இத்தாலியின் ஐந்து போர்க்கப்பல்களைத் தாக்கி அழித்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் கூட்டுப் படை சென் நசேரில் செருமானியப் போர்க்கப்பல் டிர்பிட்சை விரட்டுவதற்கு திடீர்த் தாக்குதலை நடத்தியது.
1946 – பனிப்போர்: பன்னாட்டளவில் அணுக்கரு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா வெளியிட்டது.
1951 – முதலாம் இந்தோசீனப் போர்: பிரெஞ்சு ஒன்றியப் படைகள் வோ இங்குயென் கியாப் தலைமையிலான வியட் மின் படைகளை மாவோ கே சமரில் தோற்கடித்தது.
1959 – சீன மக்கள் குடியரசின் அரச மன்றம் திபெத்து அரசைக் கலைத்தது.
1970 – மேற்கு துருக்கியை நிலநடுக்கம் தாக்கியதில் 1,086 பேர் உயிரிழந்தனர்.
1979 – பிரித்தானிய மக்களவையில் யேம்சு கலகனின் அமைச்சரவை மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வாக்கால் வெற்றியடைந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின் கரையில் உள்ள மிடில்டன் நகரில் அணுக்கரு உலையில் அணுக்கசிவு ஏற்பட்டது.
1988 – ஹலப்ஜா நகரின் குர்திய இன மக்களுக்கு எதிராக வேதி ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதில் சுமார் 5 ஆயிரம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது.
1994 – தென்னாபிரிக்காவில் சூலு இனத்தவர்களுக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஜோகார்னஸ்பேக் நகரில் இடம்பெற்ற கைகலப்பில் 18 பேர் கொல்லப்பட்டனர்.
1999 – கொசோவோ போரில் செர்பிய துணை இராணுவக் குழுக்களும் இராணுவத்தினரும் இணைந்து 146 கொசோவோ அல்பேனியர்களைக் கொன்றனர்.
2005 – இந்தோனேசியாவின் சுமாத்திராவில் இடம்பெற்ற 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தினால் 915 முதல் 1,314 பேர் வரையானோர் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

623 – முதலாம் மர்வான், உமையா காலிபா (இ. 685)
661 – இரண்டாம் முஆவியா, உமையா காலிபா (இ. 684)
1483 – ராபியேல் சான்சியோ, இத்தாலிய ஓவியர், கட்டிடக்கலைஞர் (இ. 1520)
1515 – அவிலாவின் புனித தெரேசா, எசுப்பானியப் புனிதர் (இ. 1582)
1801 – கார்ல் பிரீட்ரிக் நோர், உருசிய வானியலாளர் (இ. 1883]])
1863 – சில்வா லெவி, பிரான்சிய கீழைத்தேசவியலாளர், இந்தியவியலாளர் (இ. 1935)
1868 – மாக்சிம் கார்க்கி, உருசியப் புதின, நாடக எழுத்தாளர் (இ. 1936)
1874 – சாபுர்சி சக்லத்வாலா, இந்திய-பிரித்தானிய அரசியல்வாதி (இ. 1936)
1899 – ஹன்டி பேரின்பநாயகம், இலங்கை சமூக சேவையாளர், அரசியல்வாதி, கல்வியாளர் (இ. 1977)
1904 – வி. நாகையா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், பாடகர் (இ. 1973)
1922 – பா. நேமிநாதன், இலங்கை அரசியல்வாதி
1926 – போலி உம்ரிகர், இந்தியத் துடுப்பாளர் (இ. 2006)
1933 – மாஸ்டர் சிவலிங்கம், ஈழத்தின் சிறுவர் எழுத்தாளர், கதைசொல்லி
1936 – மாரியோ பார்க்காசு யோசா, நோபல் பரிசு பெற்ற பெரு எழுத்தாளர்
1940 – எஸ். ஜெபநேசன், தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண மாவட்ட ஆயர்
1942 – டானியல் டெனற், அமெரிக்க மெய்யியலாளர்
1943 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (இ. 2018)
1945 – ரொட்ரிகோ துதெர்த்தெ, பிலிப்பீன்சின் 16வது அரசுத்தலைவர்
1968 – நாசர் ஹுசைன், இந்டிய-ஆங்கிலேயத் துடுப்பாளர்
1969 – பிரெட் ரட்னர், அமெரிக்க இயக்குநர், தயாரிப்பாளர்
1970 – வின்ஸ் வுகஹன், அமெரிக்க நடிகர்
1982 – சோனியா அகர்வால், இந்தியத் திரைப்பட நடிகை
1985 – ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா, சுவிட்சர்லாந்து டென்னிசு வீரர்
1986 – லேடி காகா, அமெரிக்கப் பாடகி, நடிகை

இறப்புகள்

1552 – குரு அங்கது தேவ், சீக்கிய குரு (பி. 1504)
1584 – உருசியாவின் நான்காம் இவான், உருசியப் பேரரசர் (பி. 1530)
1899 – சுவாமி யோகானந்தர், இராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர் (பி. 1861)
1941 – வெர்ஜீனியா வூல்ஃப், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1882)
1943 – சத்தியமூர்த்தி, இந்திய அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1887)
1944 – ந. மு. வேங்கடசாமி நாட்டார், தமிழகத் தமிழறிஞர், சொற்பொழிவாளர், ஆய்வாளர் (பி. 1884)
1947 – இவான் இவானோவிச் செகால்கின், உருசியக் கணிதவியலாளர் (பி. 1869]])
1969 – டுவைட் டி. ஐசனாவர், அமெரிக்காவின் 34வது அரசுத்தலைவர் (பி. 1890)
1971 – பரலி சு. நெல்லையப்பர், தமிழக எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1889)
1991 – எச். வேங்கடராமன், தமிழகத் தமிழறிஞர், கல்வியாளர் (பி. 1919)
2006 – வேதாத்திரி மகரிசி, இந்திய மெய்யியலாளர் (பி. 1911)
2017 – அகமத் கத்ரடா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (பி. 1929)

சிறப்பு நாள்

ஆசிரியர் நாள் (செக் குடியரசு, சிலோவாக்கியா)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!