தவெகவின் 6-ம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது.
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகிறது. தமிழக அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகமும் தேர்தலை சந்திக்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான முன்னெடுப்புகளை தமிழக வெற்றிக்கழகம் மேற்கொண்டுள்ளது.
தற்போது கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகளை விஜய் முழு வீச்சில் செய்து வருகிறார். தற்போது மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையின்படி பூத் கமிட்டிகளை அமைத்து, பூத் கமிட்டி நிர்வாகிகளை தயார் செய்ய விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்களின் 6-ம் கட்ட பட்டியலை கட்சியின் தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் இன்று வெளியிடுகிறார். தவெகவிற்கு 120 மாவட்டங்கள் தமிழ்நாட்டில் பிரிக்கப்பட்டு ஏற்கனவே 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்த கட்டமாக இன்று 19 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.