பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றுவரும் நிகழ்ச்சியில் பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக 100 பிங்க் நிற ஆட்டோக்கள், 150 மஞ்சள், நீல நிற ஆட்டோக்களை பெண்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த திட்டத்தில் பெண்கள் ஆட்டோக்கள் வாங்க தமிழக அரசு தலா 1 லட்ச ரூபாய் வரை மானியம் வழங்குகிறது.

தலைநகர் சென்னையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கவும் பிங்க் நிற ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!