சென்னையில் ஏப்ரல் 12ம் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ரெட்புல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் சென்னை தீவுத்திடலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி கார் மற்றும் மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
இதில் அப்தோ பெகாலி (லெபனான்), அராஸ் கிபீசா (லிதுவேனியா) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திரில்லிங்கான சாகசம் மூலம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்க உள்ளனர். மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 4 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது.