மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிட்டார். தேர்தலில் 4 லட்சத்து 13 ஆயிரத்து 485 வாக்குகள் பெற்ற தயாநிதி மாறன் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார்.
இதனிடையே, தேர்தலில் தயாநிதி மாற்ன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அதே தொகுதியில் போட்டியிட்ட வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் வெற்றிபெற்றது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை எனக்கூறி வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.