எங்களாலயும் சாதிக்க முடியும்/Born to Win Trans Boutique

பான் டு வின் டிரான்ஸ் பொட்டிக்’

Born to Win Trans Boutique

எங்களாலயும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணம்தான் ஓப்பனிங் பான் டு வின் trans பொட்டிக்
எங்களாலயும் சாதிக்க முடியும் என்பதற்கு உதாரணத் திருநர்கள் இவர்கள்தான். பான் டு வின் அமைப்பு 2013 ஆண்டு வாக்கில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முக்கிய குறிக்கோள் திருநர்கள் இந்த சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாக வாழ வேண்டும் என்பதே ஆகும். பெரும்பாலான திருநர்கள் சமுதாயத்தில் ஏதாவது தவறான தொழில்களில் ஈடுபட்டு மற்றவர் கண்களுக்கு அற்பமாகவும் அருவருப்பாகவும் தெரிகின்றனர் அதை மாற்றும் நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதே இந்த அமைப்பு ஆகும்.
பான் டு வின் அமைப்பு திருநர்களின் திறமையை வளர்த்து அவர்கள் எந்த துறையில் ஆர்வத்துடன் இருக்கிறார்களோ அதிலேயே திறம்பட செயல்பட வைத்து அதையே தொழிலாக செய்ய முனைவோர்களுக்கு பொருள் உதவி செய்து திருநர்களை சமுதாயத்தில் மேம்படுத்த அரும்பாடு பட்டு வருகிறது. குறிப்பாக தையல் கலை, அழகு கலை, ஓட்டுனர் பயிற்சி, மற்றும் திருநர்கள் கல்வி கற்பதற்கான பொருளுதவி செய்து திருநர்களும் இந்த சமுதாயத்தில் ஆண் மற்றும் பெண்களுக்கு சமமானவரே என நிரூபித்து என காட்டியுள்ளனர்.
பான் டு வின் திருநர் முன்னேற்ற அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டு தையல் கலையில் பயிற்சி பெற்ற திருநர்கள் ஓவியா, அப்சனா, செல்வி, சந்தியா மற்றும்ரித்திக் இவர்கள் ஐவரும் சென்னை சைதாப்பேட்டையில் சாதிக்க பிறந்தவர்கள்.
ஆடையகம் ஒன்றை ஆரம்பித்து எங்களாலும் சாதிக்க முடியும் என்று இந்த சமுதாயத்திற்கு தெரிவித்துள்ளனர். இந்த ஐவர் முயற்சிக்கும் பான் டு வின் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஸ்வேதா அவர்கள் பெரும் உதவி ஆற்றியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அல்டிமேட்ரிக் கம்பெனியின் தொழிலாளர்கள் இந்த சாதிக்க பிறந்தவர்கள் கையலகம் தொடங்குவதற்கு பெரும் பங்கு உதவி ஆற்றினார்கள் என்றால் மிகை ஆகாது.
25-2-2024 அன்று இந்த Born to win trans Boutique ஆரம்பிக்கப்பட்டது இதன் திறப்பு விழாவின் போது அல்டிமேட்ரி கம்பெனி எம்பிளாய்ஸ்,சுப்ரீம் கோர்ட் அட்வகேட் மிஸ்டர் பிரபாகரன், எழுத்தாளர் திருமதி லதா சரவணன் மற்றும் டிரான்ஸ் ஜெண்டர் மாடல் அண்ட் ஆக்டர் நிலா பேபி, டைரக்டர் ஆப் பான் டு வின் அருணா நந்தகுமார் ஆகியோர் சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பான் டு வின் அமைப்பின் நிர்வாக இயக்குனர் திருநர் ஸ்வேதா அவர்கள் வரவேற்புரை வழங்கினார்
திருநர்களாகிய இவர்கள் வலியோடு வீட்டிலிருந்து வெளியேறி மனவலிமையோடு போராடி இந்த வெற்றியை பெற்றுள்ளனர். இவர்கள் ஆரம்பித்திருக்கும் பான் டு வின் ஆடையகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெரும் என பரந்த மனதுடன் எதிர்பார்க்கின்றேன். வருங்காலத்தில் இதுபோன்ற ஆதரவற்ற திருநர்களுக்கு முன் உதாரணமாக இவர்கள் இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

இந்த ஆடையகத்தின் முகவரி

. 14/142, கவரை தெரு, ஜோன்ஸ் ரோடு, சைதாப்பேட்டை, சென்னை. 600015.

கட்டுரை :
– Divanya பிரபாகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!