இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ரேகாசித்திரம்’ படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ஆசிப் அலி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி வெளியான திரைப்படம் ‘ரேகாசித்திரம்’. ‘கிஷ்கிந்தா காண்டம்’ படத்துக்கு அடுத்ததாக ஆசிப் அலி நடித்த திரில்லர் படமாக இது அமைந்தது. மம்முட்டி நடித்த ‘தி ப்ரீஸ்ட்’ படத்தின் மூலம் பிரபலமான ஜோபின் டி சாக்கோ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். முஜீப் மஜீத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்தில் அனஸ்வர ராஜன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதுடன், இந்திரன்ஸ், நிஷாந்த் சாகர், ஜரின் ஷிஹாப், சித்திக் மற்றும் பலரும் நடித்துள்ளனர். ரூ.9 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 90 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மலையாளப் படங்களில் ஒன்றாக ‘ரேகா சித்திரம்’ உருவெடுத்துள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற மார்ச் மாதம் 14-ந் தேதி சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.