கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” – அஜீத்குமார்

 கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” – அஜீத்குமார்

வருகிற அக்டோபர் மாதம் வரை நடிக்கப் போவது இல்லை என்று நடிகர் அஜித் அறிவித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் திரைப்படங்களில் நடிப்பதை கடந்து கார், பைக் ரேஸ் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக படப்பிடிப்பு முடிந்த காலகட்டங்களில் சர்வதேச கார் பந்தயங்களில் கலந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார். திரைக்கு வர உள்ள விடாமுயற்சி, ‘குட் பேட் அக்லி’ படங்களின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில், அவர் இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச கார் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக ஓர் அணியை ஏற்படுத்தி உள்ளார்.துபாயில் வருகிற 12 மற்றும் 13-ந் தேதிகளில் 20-வது சர்வதேச கார் பந்தயம் நடைபெறுகிறது. அதற்காக துபாய் வந்த நடிகர் அஜித்குமார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்கான பயிற்சியை எடுத்து வருகிறார்.

துபாயில் நடைபெற உள்ள கார் பந்தயத்தில் பங்கேற்கும் நடிகர் அஜித், அக்டோபர் மாதம் வரை நடிக்கப் போவது இல்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக நடிகர் அஜித் கூறியதாவது:- 18-வயதில் ரேசிங் தொடங்கினேன். அதன்பின் சினிமாவில் நடித்து வந்ததால் ரேசில் பங்கேற்கவில்லை. 2010- ஆம் ஆண்டு European-2 இல் களமிறங்கினேன். பின்னர் போட்டிகளில் பங்கேற்க இயலவில்லை. தற்போது கார் பந்தய தொடர் முடிவடையும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் உள்ள நிலையில் அஜித்குமார் இவ்வாறு கூறியுள்ளார்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...