‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது..!

 ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது..!

ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அங்கீகரிக்கப்பட்ட 24 இந்திய மொழிகளில் சிறந்த இலக்கிய படைப்புக்கான, விருதாக சாகித்ய அகாதமி விருது மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024ஆம் ஆண்டுக்கான விருதாளர்களின் பட்டியல் இன்று வெளியானது. இந்த ஆண்டு தமிழில் எழுத்தாளர் ஏ.ஆர்.வேங்கடாசலபதி எழுதிய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி யும் 1908’ ஆய்வு நூலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களையும், அவர்களின் படைப்புகளையும் கௌரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் மத்திய அரசு சாகித்ய அகாதமி விருதை, தேர்வு செய்யப்பட்ட இலக்கிய எழுத்தாளர்களுக்கு வழங்கி வருகிறது. இலக்கியம், நாவல், சிறுகதை போன்ற பல்வேறு பிரிவிகளின் கீழ் எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறந்த படைப்புகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

புத்தகம் குறித்து…

1908 மார்ச் 13ல் வ.உ.சி., கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலியிலும், தூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆங்கிலேய அரசு, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் மீது வரி விதிக்கப்பட்டது. அதற்கு முன்போ, பின்போ சுதந்திர போராட்டக் காலத் தமிழகத்தில் இப்படியோர் எழுச்சி ஏற்பட்டதில்லை எனலாம்.

ஏராளமான சான்றுகளைக் கொண்டு இந்த எழுச்சியின் போக்கை விவரிக்கும் இந்நூல் இதன் பின்னணியையும் விளைவுகளையும் விரிவாக ஆராய்கிறது. வ.உ.சி. இதைப் பற்றி எடுத்த நிலைப்பாட்டை விளக்குவதோடு எழுச்சியில் பங்களித்த எண்ணற்ற எளிய மக்களின் கதையினையும் மீட்டுருவாக்கம் செய்கிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...