இன்றைய ராசி பலன்கள் – 21-02-2020 வெள்ளிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்

உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்களை விரைவில் முடிக்க முயல்வீர்கள். தொழிலில் செல்வாக்கு மற்றும் மேன்மையான சூழல் உண்டாகும். தாய்வழி  உறவுகளால்  மனமகிழ்ச்சி அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
அஸ்வினி : முன்னேற்றம் உண்டாகும்.
பரணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
—————————————

ரிஷபம்
அறச்செயல்களால் கீர்த்தி உண்டாகும். தந்தையிடம் பொறுமையாக நடந்து கொள்ளவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். பணிகளில் உழைப்பிற்கேற்ற முன்னுரிமை கிடைக்கும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். ஏற்றுமதி தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : கீர்த்தி உண்டாகும்.
ரோகிணி : முன்னுரிமை கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
—————————————

மிதுனம்
பிறரை விமர்சனம் செய்வதை தவிர்க்கவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் மற்றும் பதற்றமான சூழல் உண்டாகும். விவாதங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். வெளியூர் தொடர்பான தொழில் முயற்சிகளில் சுமரான பலன்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கை வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் உண்டாகும்.
திருவாதிரை : விவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : விழிப்புணர்வு வேண்டும்.
—————————————

கடகம்
கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்களுடன் விருந்தில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் நட்பு உண்டாகும். புதுவிதமான தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் :  ஊதா நிறம்
புனர்பூசம் : அன்பு அதிகரிக்கும்.
பூசம் : நட்பு உண்டாகும்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
—————————————

சிம்மம்
வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் இருந்த நீண்ட நாள் கவலைகள் நீங்கும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மகம் : முடிவுகள் சாதகமாகும்.
பூரம் : முன்னேற்றமான நாள்.
உத்திரம் : கவலைகள் நீங்கும்.
—————————————

கன்னி
பூர்வீக சொத்துக்களால் சேமிப்பு அதிகரிக்கும். பொருளாதார மேன்மை உண்டாகும். தொழிலில் புதிய யுத்திகளை கையாண்டு இலாபம் அடைவீர்கள். பொருள் சேர்ப்பதற்கான கலையறிவு அதிகரிக்கும். அருள் தரும் வேள்விகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். பொதுத்தொண்டின் மூலம் கீர்த்தி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
உத்திரம் : சேமிப்பு அதிகரிக்கும்.
அஸ்தம் : இலாபம் அடைவீர்கள்.
சித்திரை : கீர்த்தி உண்டாகும்.
—————————————

துலாம்
வாகனப் பயணங்களால்  இலாபம் உண்டாகும். தொழில் சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான நாள். வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சொந்த ஊர் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும். மனதில் மாற்றமான சிந்தனைகள் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் :  அடர் பச்சை
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : சிந்தனைகள் தோன்றும்.
—————————————

விருச்சிகம்
தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். சகோதர உறவுகளால் ஆதரவான சூழல் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குறுகிய தூர பயணங்களின் மூலம் முன்னேற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை :  தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.
அனுஷம் : முன்னேற்றமான நாள்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
—————————————

தனுசு
எதிர்பார்த்த வங்கிக்கடன் உதவிகள் கிடைக்கும்.  வாக்குவன்மையால் இலாபம் அடைவீர்கள். கூட்டாளிகளிடம் பொறுமையாக இருக்கவும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அந்நியர்களால் தொழில் விருத்தி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மிதமான நீலம்
மூலம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : இலாபம் அடைவீர்கள்.
உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.
—————————————

மகரம்
மனைவியால் சுபவிரயம் ஏற்படும். வருங்காலம் சம்பந்தப்பட்ட பணிகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் தொடர்பான செய்திகள் வந்தடையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : சுபவிரயம் உண்டாகும்.
திருவோணம் : சுபிட்சமான நாள்.
அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————

கும்பம்
போட்டிகளில் கலந்து கொண்டு  வெற்றி பெறுவீர்கள். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு  நிறம்
அவிட்டம் :  வெற்றி கிடைக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————

மீனம்
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல்  நிலவும். உயர் அதிகாரிகளின் உதவிகளால் சில செயல்களை செய்து முடிப்பீர்கள். வாரிசுகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
பூரட்டாதி : புகழ் உண்டாகும்.
உத்திரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.
————————–

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...