வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம்,

வண்ணாரப்பேட்டையில் உரிய அனுமதியின்றி போராட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம்! கடந்த வெள்ளிக்கிழமை வண்ணாரப்பேட்டையில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது – முதலமைச்சர்! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்தது என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் விளக்கம்!

இயற்கையாக உயிரிழந்த ஒருவர் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு இரவு போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டக்காரர்களை அழைத்து பேசியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.வேண்டுமென்றே சில சக்திகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடைபெற்று வருகிறது – எடப்பாடி பழனிசாமி! 

முதல்வர் பரபரப்பு பேச்சு!
முதியவர் இறந்ததாக மாநிலம் முழுவதும் வதந்தி பரப்பி கலவரத்தை உருவாக்க நினைத்தார்கள்! அமைதி பூங்காவான தமிழகத்தில் வன்முறை நிகழ்வுகளை உருவாக்க சில கட்சிகள் திட்டமிட்டுள்ளது – சென்னை, வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு நிகழ்ச்சியில் காவல்துறை எடுத்த நடவடிக்கை குறித்து முதல்வர் பழனிச்சாமி பரபரப்பு குற்றச்சாட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!