இன்றைய முக்கிய செய்திகள்
டெல்லி என்கவுன்டர்: இருவர் சுட்டுக்கொலை. பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை. பிரகலாதபூர் பகுதியில் அதிகாலை என்கவுன்ட்டர் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை தகவல்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில், 4வது நாளாக போராட்டம். மதுரை மகபூப்பாளையம் ஜின்னா திடல் பகுதியிலும், 4வது நாளாக போராட்டம் தொடர்கிறது.
சாலை விபத்தில், மூன்று பேர் உயிரிழப்பு. தென்காசி: வாசுதேவநல்லூர் அருகே கார் மீது ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து – 3 பேர் உயிரிழப்பு.
பேரவையை Recreation Club – வோடு ஒப்பிட்ட எச்.ராஜா. CAAக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் அது பொழுதுபோக்கு Clubகளில் இயற்றப்படும் தீர்மானம் போன்றுதான் இருக்கும்; அதனால் ஒரு பயனும் இல்லை – எச்.ராஜா, தேசிய செயலாளர், பாஜக
5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் அரசாணை வெளியீடு.கடந்த 4-ம் தேதி தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியீடு. செப். 13-ம் தேதியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிப்பு.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைந்தது – ஒரு சவரன் தங்கம் ரூ.31,288க்கு விற்பனை
சிஏஏ-வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது – சபாநாயகர் திட்டவட்டம்! சபாநாயகர் அறிவிப்புக்கு சட்டப்பேரவையில் திமுக கடும் எதிர்ப்பு!
புதுச்சேரி, காரைக்காலில் ஜிப்மருக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்: புதிய அறிவிப்பை வெளியிட்ட ஜிப்மர் மருத்துவக்கல்லூரி.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மனு.திமுக தரப்பில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி 2015ல் தேர்வான 75 பேரில் 64 பேர், இரண்டு மையங்களில் தேர்வானதாக திமுக வாதம். மனுவாக தாக்கல் செய்யுமாறு கூறி விசாரணை பிப்ரவரி 28ம் தேதிக்கு ஒத்திவைப்பு. டிஎன்பிஎஸ்சி முறைகேடு – மேஜிக் பேனாவை தயாரித்தவர் கைது.சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
14 ஆண்டுகள் மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள்? தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் திட்டங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – திமுகவினரிடம் முதலமைச்சர் பழனிசாமி கேள்வி.