இன்றைய ராசி பலன்கள் – 15-02-2020 – சனிக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம்
ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும். தந்தை மற்றும் வாரிசுகளுக்கு இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாக்குவன்மையால் பெருமைகள் அடைவீர்கள். நிர்வாகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். தம்பதிகளுக்கிடையே அன்பும், புரிதலும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அஸ்வினி : எண்ணங்கள் மேலோங்கும்.
பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
—————————————
ரிஷபம்
எதிர்பாராத உதவிகளின் மூலம் நன்மை உண்டாகும். செயல்பாடுகளில் சிறிது கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். போட்டி, பந்தயங்களில் சாதகமான சூழல் அமையும். கையாளும் பொருட்களில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : நன்மை உண்டாகும்.
ரோகிணி : இடமாற்றம் சாதகமாகும்.
மிருகசீரிஷம் : கவனத்துடன் செயல்படவும். 
—————————————
மிதுனம்
தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்பட்டு பாராட்டப்படுவீர்கள். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழில் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழல் அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : பாராட்டப்படுவீர்கள்.
திருவாதிரை : மேன்மையான நாள். 
புனர்பூசம் : எண்ணங்கள் ஈடேறும்.
—————————————
கடகம்
உறவினர்களிடம் உள்ள உறவுநிலை மேம்படும். பொதுநலத்திற்கான செயல்பாடுகளில் ஆர்வம் உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரங்களில் செல்வாக்கு உயரும். உத்தியோகம் தொடர்பான பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு 
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : உறவுநிலை மேம்படும்.
பூசம் : ஆர்வம் உண்டாகும்.
ஆயில்யம் : செல்வாக்கு உயரும்.
—————————————
சிம்மம்
புதிய வேலைதேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் வந்தடையும். உடல்நலத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நலம் உண்டாகும். சகோதரர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு சவாலான வாய்ப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : வாதத்தை தவிர்க்கவும். 
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
—————————————
கன்னி
கணவன், மனைவிக்கிடையே உள்ள வாக்குவாதம் குறைந்து அன்பு அதிகரிக்கும்.  கூட்டாளிகளிடம் சாதகமான சூழல் அமையும். மனை தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான செயல்பாடுகள் எண்ணிய பலன்களை தரும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
உத்திரம் : அன்பு அதிகரிக்கும்.  
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : புதிய நட்பு கிடைக்கும்.
—————————————
துலாம்
தன்னம்பிக்கையுடன் எல்லா காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும். தொழிலில் ஏற்படும் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சுவாதி : இலாபம் உண்டாகும்.
விசாகம் : மனக்கவலைகள் குறையும்.
—————————————
விருச்சிகம்
வாரிசுகளின் மூலம் சுபவிரயம் உண்டாகும். வெளிநாட்டு வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன்களை தரும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். வேள்விகளில் கலந்து கொண்டு மந்திர உபதேசம் பெறுவீர்கள். பொருளாதாரம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். 
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
விசாகம் : சுபவிரயம் உண்டாகும்.
அனுஷம் : முயற்சிகள் ஈடேறும்.
கேட்டை : நன்மை உண்டாகும்.
—————————————
தனுசு
நண்பர்களின் மூலம் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.  சர்வதேச வணிகம் எதிர்பார்த்த பலன்களை தரும். அரசு அதிகாரிகள் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். மனதில் புதுவிதமான எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளிநாட்டு பயணங்களால் கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மூலம் : அபிவிருத்தி ஏற்படும். 
பூராடம் : சாதகமான நாள். 
உத்திராடம் : கீர்த்தி உண்டாகும்.
—————————————
மகரம்
இளைய சகோதரர்களிடம் அனுகூலமாக நடந்து கொள்ளவும். தாயின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். எண்ணிய முயற்சிகள் ஈடேறும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் இலாபம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : அனுகூலமான நாள். 
திருவோணம் : பயணங்கள் உண்டாகும்.
அவிட்டம் : முயற்சிகள் ஈடேறும். 
—————————————
கும்பம்
கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். கால்நடைகளால் எதிர்பார்த்த இலாபம் அடைவீர்கள். தந்தைவழி உறவுகளின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும். ஏற்றுமதி தொடர்பான தொழில்களில் எண்ணிய இலாபம் கிடைக்கும். கலைஞர்களுக்கு திறமைகள் வெளிப்பட்டு கீர்த்தி உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : நன்மை உண்டாகும்.
சதயம் : மனமகிழ்ச்சி அடைவீர்கள். 
பூரட்டாதி : கீர்த்தி உண்டாகும்.
—————————————
மீனம்
எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்ய வேண்டும். வீண் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். வாகனப்  பயணங்களில் கவனத்துடன் செல்லவும். சுயதொழில் சார்ந்த புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
ரேவதி : சிந்தித்து செயல்படவும்.
————————————-

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...