இன்றைய முக்கிய செய்திகள்

 இன்றைய முக்கிய செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து போராட்டம்.

சென்னை சிஏஏ போராட்டத்தில் முதியவர் இறந்ததாக கூறுவது பொய்யான செய்தி – சென்னை காவல்துறை. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல்நிலை குறித்து வெளியாகும் செய்திள் உண்மையில்லை – காவல் துறை.

ஈரான் நாட்டிலிருந்து சரக்கு கப்பல் மூலமாக தூத்துக்குடிக்கு, 21 ஆயிரம் டன் டீசல் கடத்தலா?சரக்கு கப்பல் முகவரிடம் தூத்துக்குடி எஸ்பி விசாரணை உரம் கொண்டு வருவதாக  கப்பலின் முகவர் கூறியதால், மத்திய வருவாய் புலனாய்வு மற்றும் கஸ்டம்ஸ் துறையினர் சந்தேகம்.

சென்னை தடியடி; மதுரையில் போராட்டம் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தியதை கண்டித்து மதுரை மகபூப்பாளையம் பகுதியில், 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்.

புதிதாக அறிவிக்கப்பட்ட 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மார்ச் 1 முதல் 14ம் தேதி வரை அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்கிறார், முதலமைச்சர். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...