அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு..!
அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து குளிர்காலம் தொடங்கியது. குளிர்காலம் தொடங்கியது முதலே அங்கு மிதமாக பனி பொழிந்து வந்தது. ஆனால், சமீப நாட்களாக அமெரிக்காவில் கடுமையான பனிப்பொழிவு நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் மேற்கு மாகாணங்களான வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது.
அதன்படி, வாஷிங்டன், ஓகியோ, மிக்சிகன் உள்ளிட்ட பகுதிகளில் 61 செ.மீ. அளவுக்கு பனிப்பொழிவு நிகழ்ந்துள்ளது. அதிகப்பட்சமாக பென்சில்வேனியாவில் வடமேற்கு நகரங்களில் 73 செ.மீ வரை பனிப்பொழிவு ஏற்பட்டதாக அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பனிப்பொழிவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாலைகள், ரயில் தண்டவாளங்களை பனித்துளிகள் போர்வை போல் மூடியுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பனிபொழிவு அதிகமாக காணப்படும் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டடுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.