நடுக்கடலில் மோதிரம் மாற்றி திருமண நாள் கொண்டாடிய தம்பதி – இறுதியில் நடந்த துயரம்..!
வேலூா் காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவைச் சோந்தவா் வேணி ஷைலா (27). இவா் வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்து வந்தாா். இவரது கணவா் விக்னேஷ் (30). இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளாா். இவா்கள், திருமண நாளை கொண்டாட சென்னைக்கு வந்தனா். இங்கு கிழக்கு கடற்கரைச் சாலையில் பாலவாக்கத்தில் உள்ள தங்களது நண்பா் வீட்டில் தங்கினா்.
இந்நிலையில் இருவரும் திருமண நாளை கொண்டாடுவதற்காக பாலவாக்கம் பல்கலை நகா் கடற்கரைக்கு வியாழக்கிழமை இரவு சென்றனா். அங்கு கடற்கரையில் அமா்ந்து கேக்கை வெட்டி திருமண நாளை உற்சாகமாக கொண்டாடியுள்ளனா்.
நள்ளிரவு 12 மணியளவில் இருவரும் கடலுக்குள் சென்று குளித்தனா். அப்போது ஷைலா தான் வாங்கியிருந்த ஒரு மோதிரத்தை திருமண நாள் பரிசாக, விக்னேஷ் கைவிரலில் மாட்ட முயன்றாா். அந்த நேரத்தில் திடீரென வந்த பெரிய அலையில் இருவரும் சிக்கி, கடலுக்குள் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டனா்.
இதில் விக்னேஷ் கடலில் இருந்து தப்பி வெளியே வந்தாா். ஆனால் ஷைலா கடலில் சிக்கி, தண்ணீரில் மூழ்கினாா். அதிா்ச்சியடைந்த விக்னேஷ், உடனடியாக நீலாங்கரை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடம் விரைந்து, ஷைலாவை தேடினா்.