சாகீர் உசேன் மூன்றாவது குடியரசுத் தலைவர் பிறந்த தினம் – 08.02.1897

 சாகீர் உசேன் மூன்றாவது குடியரசுத் தலைவர் பிறந்த தினம் – 08.02.1897
அன்றும்… இன்றும் 08.02.2020

இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1967ல் இருந்து 1969 வரை அவர் இறக்கும் வரை அப்பதவியை வகித்தார். 1962-1967 காலத்தில் இவர் துணைக் குடியரசுத் தலைவராகவும் இருந்தார். ஆந்திர மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத்தில் 1897 பிப்ரவரி. 8ம் நாள் அவர் பிறந்தார்.

உத்தரப் பிரதேசத்திலுள்ள எடவா என்ற ஊரில் உயர்நிலைக் கல்வி கற்றார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். பின் செருமானியிலுள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் பயின்று பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் மாணவராக இருந்தபோது, காந்தியடிகளின் தீவிர பற்றாளரானார். காந்தியடிகளின் ஆதாரக் கல்விமுறை இவரை மிகவும் கவர்ந்த்து. கல்வித்துறையில் அவர் பணியாற்றியபோது ஆதாரக் கல்விமுறையினை நாடெங்கும் பரப்ப அரும்பாடுபட்டார்.

கல்வித்துறையில் இவர் ஆற்றிய அருந்தொண்டினைப் பாராட்டி, இந்திய அரசு இவருக்கு 1954ல் பத்ம விபூஷண் எனும் விருதினை வழங்கிப் பாராட்டியது. 1963ல் நாட்டின் மிக உயர்ந்த விருதாகிய பாரத ரத்னா விருது வழங்கிச் சிறப்பித்தது. டெல்லி, கல்கத்தா, அலகபாத், அலிகார், கெய்ரோ ஆகிய பல்கலைக் கழகங்கள் இவருக்கு இலக்கிய மேதை பட்டம் வழங்கிச் சிறப்பித்தன.

இந்தியநாட்டின் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தின் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக 1926 முதல் 1948 வரை பணியாற்றினார். அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகவும் எட்டு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்கள். பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும்இருந்தார். 1962ல் மே மாதத்தில் இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்வுபெற்றார். 1967ல் இந்திய குடியரசுத் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளே அப்பதவியிலிருந்த அவர் 1969 மே மாதம், 3ம் தேதி காலமானார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...