வரலாற்றில் இன்று (30.11.2024 )
வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
வரலாற்றில் இன்று | Today History in Tamil
நவம்பர் 30 (November 30) கிரிகோரியன் ஆண்டின் 334 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 335 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 31 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
1612 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் படைகளுக்கும் போர்த்துக்கீசருக்கும் இடையில் இந்தியக் கரையில் சுவாலி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரித்தானியர் வென்றனர்.
1700 – சுவீடனின் பன்னிரண்டாம் சார்ல்ஸ் தலைமையில் 8.500 இராணுவத்தினர் எஸ்தோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.
1718 – நோர்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது சுவீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்ல்ஸ் இறந்தான்.
1782 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் இரண்டுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிசில் கையெழுத்திடப்பட்டது.
1803 – ஸ்பானியர்கள் லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரபூர்வமாகக் கையளித்தனர். பிரான்ஸ் இப்பிரதேசத்தை 20 நாட்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்கு விற்றது.
1806 – நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர்.
1853 – ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன.
1872 – உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது.
1908 – பென்சில்வேனியாவில் மரியான்னா என்ற இடத்தில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் கொல்லப்பட்டனர்.
1917 – முதலாம் உலகப் போர்: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர். ஐயாத்துரை என்ற லான்ஸ் கோப்ரல் போரில் ஈடுபட்டு இறந்தார்.
1936 – லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது.
1939 – சோவியத் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு குண்டுகளை வீசீன.
1943 – இரண்டாம் உலகப் போர்: டெஹ்ரானில் கூடிய அமெரிக்க ஜனாதிபதி பிராங்கிளின் ரூஸ்வெல்ட், பிரித்தானியத் தலைமை அமைச்சர் வின்ஸ்டன் சேர்ச்சில், ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஜூன் 1944 இல் ஐரோப்பாவைத் தாக்கும் தமது திட்டத்தை ஆராய்ந்தனர்.
1962 – பர்மாவைச் சேர்ந்த யூ தாண்ட் ஐக்கிய நாடுகள் சபையின் 3வது பொதுச் செயலராகத் தெரிவானார்.
1966 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது.
1967 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது.
1967 – சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.
1981 – பனிப்போர்: ஜெனீவாவில் ஐக்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் பிரதிநிதிகள் ஐரோப்பாவில் நிலைகொண்டுள்ள நடுத்தர ஏவுகணைகளைக் குறைக்க பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர்.
1995 – வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.
பிறப்புகள்
1508 – ஆன்ட்ரே பல்லாடியோ, இத்தாலியக் கட்டிடக் கலைஞர் (இ. 1580)
1667 – ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (இ. 1745)
1761 – சிமித்சன் டெனண்ட், ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1815)
1825 – வில்லியம்-அடோல்ஃப் பூகுவேரோ, பிரான்சிய ஓவியர் (இ. 1905)
1835 – மார்க் டுவெய்ன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1910)
1858 – ஜகதீஷ் சந்திர போஸ், இந்திய இயற்பியலாளர் (இ. 1937)
1869 – நில்சு குஸ்டாப் டேலன், நோபல் பரிசு பெற்ற சுவீடன் இயற்பியலாலர் (இ. 1937)
1874 – வின்ஸ்டன் சர்ச்சில், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1965)
1888 – கோவைக்கிழார், தமிழகத் தமிழறிஞர், வழக்குரைஞர் (இ. 1969)
1902 – திருக்கண்ணபுரம் விஜயராகவன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1955)
1904 – ச. து. சுப்பிரமணிய யோகி, தமிழகத் தமிழறிஞர், கவிஞர் (இ. 1963)
1912 – ந. சிதம்பர சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர் (இ. 1977)
1923 – வி. என். ஜானகி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, தமிழ்நாட்டின் 5வது முதலமைச்சர் (இ. 1996)
1931 – ரூமிலா தாப்பர், இந்திய வரலாற்றியலாளர்
1943 – டெரன்சு மாலிக், அமெரிக்க இயக்குநர்
1945 – வாணி ஜெயராம், தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி (இ. 2023)
1947 – மோசசு நாகமுத்து, கயானா அரசியல்வாதி, எழுத்தாளர்
1948 – கே. ஆர். விஜயா இந்திய திரைப்பட நடிகை
1952 – ஜீவா, தெலுங்குத் திரைப்பட நடிகர்
1957 – ஜி. விவேகானந்த், இந்திய அரசியல்வாதி
1961 – மன்சூர் அலி கான், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1965 – பென் ஸ்டில்லர், அமெரிக்க நடிகர்
1967 – இராஜிவ் தீக்சித், இந்திய சமூக ஆர்வலராவார் (இ. 2010)
1972 – கிறிஸ்டோப் பெக், தொலைக்காட்சி இசையமைப்பாளர்
1976 – மார்த்தா பர்கே, இத்தாலிய வானியலாளர்
1982 – எலிஷா கத்பெர்ட், கனடிய நடிகை
1985 – கலே கியூகோ, அமெரிக்க நடிகை
1987 – டேனியல் நோபோவா, எக்குவடோர் அரசியல்வாதி
1988 – பிலிப் ஹியூஸ், ஆத்திரேலியத் துடுப்பாளர் (இ. 2014)
1989 – அபர்ணா நாயர், மலையாளத் திரைப்பட நடிகை
1990 – மாக்னசு கார்ல்சன், நோர்வே சதுரங்க வீரர்
1990 – நிவேதா பெத்துராஜ், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1990 – ராசி கன்னா, இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
1805 – பழசி இராசா, கோட்டயம்-மலபார் அரசர் (பி. 1753)
1830 – யோகான் தோபியாசு மேயர், செருமானிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் (பி. 1752)
1900 – ஆஸ்கார் வைல்டு, ஐரிய எழுத்தாளர் (பி. 1854)
1930 – மேரி ஹாரிசு ஜோன்சு, அமெரிக்க தொழிலாளர் செயற்பாட்டாளர் (பி. 1837)
1988 – எம். கே. றொக்சாமி, இலங்கை இசைக்கலைஞர், திரைப்பட இசையமைப்பாளர் (பி. 1932)
1990 – டி. ஆர். ராமச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர் (பி. 1917)
1992 – மீனாம்பாள் சிவராஜ், தமிழக சமூகப் போராளி, பெண்ணியவாதி (பி. 1904)
2012 – ஐ. கே. குஜரால், இந்தியாவின் 12வது பிரதமர் (பி. 1919)
2013 – ரகுராம், திரைப்பட நடன இயக்குநர், நடிகர் (பி. 1948)
2013 – பால் வாக்கர், அமெரிக்க நடிகர் (பி. 1973)
2014 – ஜார்பம் காம்லின், இந்திய அரசியல்வாதி (பி. 1961)
2018 – ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ், அமெரிக்காவின் 41-வது அரசுத்தலைவர் (பி. 1924)
2022 – சியான் செமீன், சீனாவின் 5வது அரசுத்தலைவர் (பி. 1926)
சிறப்பு நாள்
பார்போடஸ் – விடுதலை நாள் (1966)
புனித அந்திரேயா விழா – கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சபையார்களால் கொண்டாடப்படுகிறது.
புனித அந்திரேயா தினம் – இசுக்காட்லாந்து நாட்டில் தேசிய தினமாகவும், வங்கி விடுமுறை தினமாகவும் உள்ளது.