கொரோனா வைரஸ் தாக்கிய கர்ப்பிணிக்கு பிரசவம்: ஆரோக்கியமான குழந்தை பிறந்தது:
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கிய கர்ப்பிணிக்கு பிரசவம்: ஆரோக்கியமான குழந்தை பிறந்தது:
ஹர்பின்: சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கிடையே, அந்நாட்டின் ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு சில நாட்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. அவர் மாகாண தலைநகர் ஹர்பினில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
கடந்த 30-ந் தேதி நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தைக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க உடனடியாக ஆபரேஷன் மூலம் குழந்தையை எடுக்கலாம் என்று டாக்டர்கள் முடிவு செய்தனர். அதே நாளில், ஆபரேஷன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. அது, 3 கிலோ எடையில் இருந்தது.
மறுநாள் (31-ந் தேதி) குழந்தைக்கு நடத்தப்பட்ட ரத்த பரிசோதனையில், அதற்கு கொரோனா வைரஸ் தாக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. அதன் தாயாரின் உடல் வெப்ப நிலையும் குறைந்தது. இருப்பினும், தாயையும், சேயையும் தனிவார்டில் வைத்து டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.