திருநர் திறமைத் திருவிழா 2024

 திருநர் திறமைத் திருவிழா 2024

திருநர் திறமைத் திருவிழா 2024

Born to win social welfare trust அமைப்பு இந்த ஆண்டு திருநர் வஞ்சிக்கப்பட்ட தினத்தை முதன்முறையாக திறமைத் திருவிழாவாகக் கொண்டாடினார்கள்.

நவம்பர் 20ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆப் தமிழ்நாடு சிஎஸ்ஐஆர் தரமணியில் இந்த விழா சிறப்பாக நடந்தது.

திருநர் மியா மிதுன் அவர்கள் தமிழ் தாய் வாழ்த்து பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
திருநர் ஸ்வேதா அவர்கள் இந்த நாள் திருநர் வஞ்சிக்கப்பட்ட துக்க நாளாக அனுசரிக்காமல் இந்த நாளை நமக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய தினமாக கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டார்.திருநர்களுக்கு உத்வேகமான போட்டிகளை நடத்தி திருநர்களை அதில் பங்கு பெற வைத்து இந்த நாளை ஒரு அற்புதமான நாளாக மாற்றினார்.

திருநர் ஸ்வேதாஅவர்கள் இனிவரும் காலங்களில் திருநர்கள் எவராலும் வஞ்சிக்கப்பட்டாலும் தவறான முடிவை நோக்கி போகாமல் நாமும் இந்த சமுதாயத்தில் முக்கிய பங்கு ஆற்றிட முனைப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் போட்டிகளுக்கான நடுவர்களாக பங்கேற்றவர்கள் சினேகா மோகன்தாஸ், மிலா, பயனியர் சதீஷ், ஓவியர் ஷியாம், கோமதி, பிரதிஷா செந்தில்குமார், லதா சரவணன், அபூர்வா.ஆவார்கள்.

களிமண் சிற்ப போட்டி, ஒப்பனைப்போட்டி, பாட்டு போட்டி, சமையல் போட்டி, நாடகப் போட்டி, ஓவியப்போட்டி, நடன போட்டி, தையல் போட்டி, கட்டுரை போட்டி மற்றும் பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. அனைத்து போட்டிகளிலும் ஐந்து நபர்கள் மட்டுமே பங்கு பெற்றனர்.

களிமண் சிற்ப போட்டியில் ஐந்து நபர்கள் கலந்து கொள்ள 20 நிமிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இதில் மூவர் முதலிடம் பிடித்தனர்.அதில் வடிக்கப்பட்ட சிலைகள் பாரதியார், அம்பேத்கர்,விவேகானந்தர்,புத்தர் மற்றும் பெரியார் சிலைகள் ஆகும். பாரதியார் சிலை வடித்த கார்த்திகா முதல் பரிசும்,புத்தர் சிலை வடித்த அம்முவிற்கு இரண்டாம் பரிசும் பெரியார் சிலை வடித்த ராகவிக்கு மூன்றாம் பரிசும் கிடைத்தது. கோமதி அவர்கள் அவர்களுக்கு காசோலைகளை பரிசாக வழங்கி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.

ஒப்பனைப் போட்டி அதற்கு ஒதுக்கப்பட்ட நேரமும் 20 நிமிடம். மட்டுமே போட்டியாளர்கள் ஐவர். அதில் இருவர் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்தனர்.கொடுக்கப்பட்ட குறைந்த நேரத்திலேயே டிரடிஷனல் மேக்கப் வெஸ்டர்ன் மேக்கப் அண்ட் பிரைடல் மேக்கப் செய்தனர். அதில் முதல் பரிசு பெற்றவர் த
சாதனா. இரண்டாவது பரிசு பெற்றவர் மியா.
மிலா அவர்கள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை பரிசாக கொடுத்து ஊக்குவித்தார்.

பாட்டு போட்டியில் கலந்து
கொண்டவர்கள் சமுதாயத்தில் சந்திக்கும் அவலங்களை வெளிப்படுத்தும் விதமாக மனதை உருக்கும்படி பாடினார்கள். அதில் முதல் பரிசு மியாமிலன் அவர்களுக்கும் இரண்டாவது பரிசு மூன்றாவது பரிசு முறையே நீனா மற்றும் அஜித்தா அவர்களும் கிடைத்தது. பரிசுகளை வழங்கியது பயனீயர் சதீஷ் ஆவார்.

நெருப்பில்லாத சமையல் போட்டி நடந்தது.அதில் முதல் பரிசு பெற்றவர் மனிஷா. இரண்டாவது பரிசை திவ்யா பிரியா அவர்களும் மூன்றாவது பூர்விகா அவர்களும் பரிசுகளை பெற்றனர். அவர்களுக்கு பரிசுகளை வழங்கியவர் ஸ்நேகா மோகன்தாஸ் ஆவார்.

நாடகப் போட்டியில் மூவர் பங்கேற்றனர். அவர்கள் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும் இந்த சமுதாயம் அவர்களை புறந்தள்ளும் அவல நிலையை நடிப்பின் மூலம் எடுத்துக்காட்டினர்கள்.முதல் பரிசுபெற்ற ஜீவிதா விற்கு பிரதிக்ஷா அவர்கள் வழங்கினார்

ஓவியப்போட்டியில் கொடுக்கப்பட்ட 20 நிமிடத்தில் கலந்து கொண்டவர்கள் ஓவியங்களை தீட்டினர் அதில் முதல் பரிசை வென்றவர் சாதனா. இரண்டாவது பரிசு ஜோஷிகா ஜாஸ்மின் அவர்களுக்கும் மூன்றாவதுபரிசு ஓவியா அவர்களுக்கும் கிடைத்தது.அவர்களுக்கு ஓவியர் ஷியாம் அவர்கள் பரிசகளை வழங்கினார்.

நடன போட்டியில் கொடுக்கப்பட்ட பத்து நிமிடத்தில் திருநர்களுக்கும் நாட்டுப்பற்று உள்ளது என்றும் திருநர்கள் வாழ்வில் சந்திக்கும் தினசரி பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து அவர்கள் தங்களை எப்படி மேன்மைப்படுத்தி கொள்கின்றனர் என்பதையும் நடனத்தில் வெளிப்படுத்தினார்கள்.முதல் பரிசு பெற்றவர் சுசித்ரா இரண்டாவது பரிசு பெற்றவர் ரேணுகா.பரிசுகளை வழங்கியவர் செந்தில்குமார் ஆவர்.

தையல் போட்டியில் 20 நிமிடத்திற்குள் கைகளாலேயே குழந்தைகளுக்கு சட்டை தைத்தனர். அதில் முதல் பரிசு பெற்ற சரிதாவுக்கும் இரண்டாவது பரிசு குட்டி அவர்களுக்கும் அபூர்வா அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டி இரண்டிலும் அவர்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் பிரச்சினைகளையும் சமுதாயத்தால் அவர்கள் புறம் தள்ளப்படுவதையும் மற்றும் அவர்களுக்கு சமுதாயத்தில் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தையும் முன்னுரிமையும் மையப்படுத்தி கட்டுரை எழுதப்பட்டு இருந்தது. கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றவர் நிரஞ்சனா இரண்டாவது பரிசு சிந்து அவர்களுக்கும் மூன்றாவது பரிசு சந்தியா அவர்களுக்கும் கிடைத்தது.

பேச்சு போட்டியில் முதல் பரிசு அப்ஸனா பாபிக்கும் இரண்டாவது பரிசு எவஞ்சலின் மார்ட்டி ன் அவர்களுக்கும் மூன்றாவது பரிசு பிரகதி சிவன் அவர்களுக்கும் கிடைத்த து. எழுத்தாளர் லதா சரவணன் அவர்கள் இவர்களுக்கு பரிசுகளை கொடுத்து ஊக்கப்படுத்தினார்.

நிகழ்ச்சியின் நிறைவு பகுதியாக இந்த சமுதாயம் திருநர்களை புறக்கணித்ததாலும் சில நபர்களால் வஞ்சிக்கப்பட்டதாலும் மனமுடைந்து மரணத்தை தழுவியவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பட்டது. இனிவரும் காலங்களில் திருநர்கள் இதுபோன்ற முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கக் கூடாது என சபதம் ஏற்றனர்.
போட்டிகளுக்கு நடுவராக பங்கு பெற்ற அனைத்து பிரமுகர்களும் மற்றும் ஸ்வேதா அவர்களும் திருநர்களுக்கு புத்திமதிகளை வழங்கினார்கள் முட்டாள்தனமான மற்றும் வேதனை யான முடிவுகளை எடுக்காமல் சமுதாயத்தில் மற்ற திருநர்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்று இந்த விழா வில் வலியுறுத்தப்பட்டது.

-திவன்யா பிரபாகரன்

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...