இன்றைய ராசி பலன்கள் – 28-01-2020 – திங்கட்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழல் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்வீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாராட்டுகளும், மதிப்புகளும் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அஸ்வினி : ஆதரவான நாள்.
பரணி : பயணங்கள் உண்டாகும்.
கிருத்திகை : இடர்பாடுகள் குறையும்.
————————————————————————
ரிஷபம் :
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளும், அதற்கான பணிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். தொழில் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு முதலீடுகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான எதிர்பார்த்த உதவிகள் சிறு அலைச்சலுக்கு பின் கிடைக்கும். குடும்ப பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு தகுந்தவாறு விட்டுக்கொடுத்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும்.
ரோகிணி : முதலீடுகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
————————————————————————
மிதுனம் :
வாழ்க்கை துணைவரின் வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். போட்டித் தேர்வுகளில் எண்ணிய முடிவுகளால் அனைவரிடத்திலும் மதிப்புகள் அதிகரிக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். சமூக பணியில் இருப்பவர்களுக்கு மக்களிடையே ஆதரவான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : மதிப்புகள் அதிகரிக்கும்.
புனர்பூசம் : முன்னேற்றமான நாள்.
————————————————————————
கடகம் :
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும், அலைச்சல்களும் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை அளிக்கும். எதிர்பாராத இடமாற்றங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிக்கும்போது சிந்தித்து செயல்படவும். கால்நடைகளிடம் சற்று விழிப்புணர்வுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
ஆயில்யம் : மாற்றம் உண்டாகும்.
————————————————————————
சிம்மம் :
உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நண்பர்களிடம் எதிர்பார்த்திருந்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உடல் சோர்வினால் செய்யும் வேலைகளில் காலதாமதம் உண்டாகும். எதிர்பாராத தனவரவுகளின் மூலம் நன்மை ஏற்படும். குழந்தைகளிடம் சற்று கனிவுடன் பழகவும். சுபகாரியங்களுக்கான அலைச்சல்கள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மகம் : பிரச்சனைகள் குறையும்.
பூரம் : சோர்வு உண்டாகும்.
உத்திரம் : கனிவு வேண்டும்.
————————————————————————
கன்னி :
வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாக அமையும். மறைமுக எதிர்ப்புகளால் திட்டமிட்ட காரியங்களில் காலதாமதம் ஏற்படும். எடுத்துச்செல்லும் உடைமைகளில் கவனத்துடன் இருக்கவும். எதிர்பாராத செய்திகளின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கணவன், மனைவியிடையே சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திரம் : முடிவுகள் சாதகமாகும்.
அஸ்தம் : கவனம் வேண்டும்.
சித்திரை : அன்பு அதிகரிக்கும்.
————————————————————————
துலாம் :
மனைவியிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் பொறுமையாக இருக்கவும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். புத்திரர்களினால் சாதகமான சூழல் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
சுவாதி : நிதானத்தை கடைபிடிக்கவும்.
விசாகம் : சாதகமான நாள்.
————————————————————————
விருச்சிகம் :
பொதுத்தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சாதகமான சூழல் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் முன்னேற்றத்தை அளிக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். புதிய நபர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
விசாகம் : பாராட்டுகள் கிடைக்கும்.
அனுஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
————————————————————————
தனுசு :
மூலிகைகளால் இலாபம் உண்டாகும். தாயின் ஆதரவால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாகனப் பயணங்களால் இலாபம் உண்டாகும். தைரியத்துடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மூலம் : இலாபம் உண்டாகும்.
பூராடம் : முயற்சிகள் மேம்படும்.
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
————————————————————————
மகரம் :
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனை தொடர்பான செயல்பாடுகளில் இலாபம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களினால் சுபவிரயம் உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். வாக்குவன்மையால் பெருமைகள் அடைவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : இலாபம் உண்டாகும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
————————————————————————
கும்பம் :
புண்ணிய செயல்களால் கீர்த்தி உண்டாகும். புதுவிதமான எண்ணங்களால் மனதில் சஞ்சலம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். புண்ணிய யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். அந்நியர்களால் தொழில் அபிவிருத்தி உண்டாகும். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். பொருட்சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : கீர்த்தி உண்டாகும்.
சதயம் : முன்னேற்றம் ஏற்படும்.
பூரட்டாதி : பயணங்கள் செல்ல நேரிடும்.
————————————————————————
மீனம் :
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்யவும். நண்பர்களுடன் கூடிப்பேசி மனம் மகிழ்வீர்கள். சுபச்செய்திகள் வந்தடையும். வீண் அலைச்சல்கள் உண்டாகும். வங்கிகளில் எதிர்பார்த்த சூழல் ஏற்படும். வெளிநாட்டு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பொருட்களை சேர்ப்பதற்கான கலையறிவு மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
பூரட்டாதி : நிதானம் வேண்டும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : கலையறிவு மேம்படும்.
————————————————————————
– ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...