இன்றைய ராசி பலன்கள் – 26.01.2020 – ஞாயிற்றுக்கிழமை – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

மேஷம் :
வீண் அலைச்சல்களால் சோர்வு உண்டாகும். பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். இறைவழிப்பாட்டில் மனம் ஈடுபடும். தொழில் தொடர்பான எதிர்கால இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். சில இடங்களில் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அஸ்வினி : சோர்வு உண்டாகும்.
பரணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
கிருத்திகை : மாற்றம் உண்டாகும்.
————————————————————————–
ரிஷபம் :
பழைய கடன்களை அடைப்பதற்கான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தலைமை அதிகாரிகளிடம் சாதகமான சூழல் அமையும். அந்நியர்களால் எதிர்பாராத தனவரவு உண்டாகும். உடைமைகளில் கவனம் வேண்டும். வேள்விகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : கடன்கள் தீரும்.
ரோகிணி : முன்னேற்றம் ஏற்படும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.
————————————————————————–
மிதுனம் :
மூத்த உடன்பிறப்புகளிடம் கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல்-வாங்கல் தொடர்பான செயல்களில் சிந்தித்து செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
————————————————————————–
கடகம் :
புத்திரர்களால் பெருமை உண்டாகும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் மூலம் தொழிலில் உதவிகள் கிடைக்கும். பதவி உயர்விற்கான சாதகமான சூழல் அமையும். சுயதொழிலில் எதிர்பாராத வியாபாரம் நடைபெறும். பொதுச்சேவைகளால் ஆதரவான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : பெருமை உண்டாகும்.
பூசம் : உதவிகள் கிடைக்கும்.
ஆயில்யம் : ஆதரவான நாள்.
————————————————————————–
சிம்மம் :
தந்தையின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். எண்ணங்களில் மேன்மை உண்டாகும். சம வயதினர்களிடம் கவனத்துடன் இருக்கவும். ஞானம் சார்ந்த உபதேசங்கள் கிடைக்கும். மனைகளால் இலாபம் உண்டாகும். புண்ணிய செயல்களால் நன்மைகள் கிடைக்கும். மனதிற்கு நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
மகம் : கவனம் வேண்டும்.
பூரம் : மேன்மை உண்டாகும்.
உத்திரம் : நன்மைகள் கிடைக்கும்.
————————————————————————–
கன்னி :
தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு மேம்படும். எதிர்காலம் சம்பந்தமான சிந்தனையில் மாற்றம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்களுக்கு மேன்மையான சூழல் அமையும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். பூமி விருத்திக்கான எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : அறிவு மேம்படும்.
அஸ்தம் : மாற்றம் உண்டாகும்.
சித்திரை : சாதகமான நாள்.
————————————————————————–
துலாம் :
கால்நடைகளால் இலாபம் ஏற்படும். பொருட்சேர்க்கை உண்டாகும். விவாதங்களில் புதிய முயற்சிகளால் எதிர்பார்த்த சாதகமான சூழல் அமையும். மாணவர்களின் அறிவுக்கூர்மை வெளிப்படும். தூர தேச பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். அந்நியர்களால் சாதகமான சூழல் அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
சித்திரை : இலாபம் உண்டாகும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : மகிழ்ச்சி உண்டாகும்.
————————————————————————–
விருச்சிகம் :
புதிய செயல்திட்டம் அமைத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உடன்பிறப்புகளால் மேன்மையான நிலை அமையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் இருக்கும் கவலைகள் குறையும். தொழிலில் உள்ள நேர்மையால் உங்களின் மதிப்பு உயரும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : செயல்திட்டம் உண்டாகும்.
அனுஷம் : மேன்மையான நாள்.
கேட்டை : கவலைகள் குறையும்.
————————————————————————–
தனுசு :
தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. தொழிலை அபிருத்தி செய்வதற்கான எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். உறவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த முடிவுகள் சாதகமாகும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செய்யவும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மூலம் : உதவிகள் கிடைக்கும்.
பூராடம் : சாதகமான நாள்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.
————————————————————————–
மகரம் :
மனதில் புதுவிதமான உணர்வுகளுடன் கூடிய எண்ணங்கள் தோன்றும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனதில் இருந்த பல்வேறு எண்ணங்களில் தெளிவு உண்டாகும். சபைகளில் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். தாயின் ஆதரவால் மேன்மையான சூழல் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
திருவோணம் : தெளிவு உண்டாகும்.
அவிட்டம் : மேன்மையான நாள்.
————————————————————————–
கும்பம் :
விளையாட்டு வீரர்களுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். துணிவுடன் புதிய ஆராய்ச்சியில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். மறைமுக எதிரிகளை பற்றிய புரிதல் ஏற்படும். அந்நியர்களின் ஆதரவால் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அவிட்டம் : எண்ணங்கள் ஈடேறும்.
சதயம் : புரிதல் ஏற்படும்.
பூரட்டாதி : வெற்றி கிடைக்கும்.
————————————————————————–
மீனம் :
நண்பர்களுக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். நிர்வாகத்தில் உள்ள ஊழியர்களிடம் உங்களின் மதிப்பு உயரும். கூட்டாளிகளின் உதவியால் தொழிலில் சாதகமான நிலை உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : வேறுபாடுகள் குறையும்.
உத்திரட்டாதி : மதிப்பு உயரும்.
ரேவதி : அனுகூலமான நாள்.
————————————————————————–
      – ஜோதிடர் அ.மோகன்ராஜ்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...