வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி அதிரடி அறிவிப்பு…!!
99 பேருக்கு வாழ்க்கையே போச்சு…!!
டி.என்.பி.எஸ்.சி குரூப் – 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடை விதித்து டி.என்.பி.சி. அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் டிஎன்பிசி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது . அரசு பணியில் சேர்வதற்கு பல லட்சம் பேர் பல நாட்கள் உழைத்து படித்து கடுமையாக போராடி வருகின்றனர் . ஆனால் சிலரோ குறுக்கு வழியில் தேர்வில் வெற்றி பெற்று வேலையில் சேர்ந்து விடுகின்றனர் , இது போன்ற குற்றங்கள் உண்மையாக உழைக்கும் மாணவர்கள் மத்தியில் போட்டித் தேர்வுகள் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் , ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் , கீழக்கரை அருகே 2 மையங்களில் தேர்வு எழுதிய 99 பேர் முறைகேட்டில் ஈருபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேற்கண்ட இரண்டு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் மட்டும் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வானது சந்தேகத்தை ஏற்படுத்தியது, முதல் 100 இடங்களில் இங்கு தேர்வெழுதிய 39 பேர் இடம் பெற்றுள்ளனர் . இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவித்திருந்த டிஎன்பிஎஸ்சி சந்தேகத்துக்கிடமான அத்தனை பேரையும் சென்னைக்கு வரவழைத்து பல கட்டங்களாக விசாரணையை நடத்தியது . அதில் அவர்களுக்கு தனி தேர்வும் நடத்தப்பட்டது . பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது .