லாலா லஜபதி ராய் நினைவு தினம்
ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி உயிரை விட்ட கொள்கைவாதி பஞ்சாப் சிங்கம். சமூக சீர்திருத்தத்திற்கும், தேச விடுதலைக்கும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்களில் ஒருவர் லாலா லஜபதி ராய்.வேறுபாடு, தீண்டாமை ஆகிய கொடுமைகளைச் சாடினார். குழந்தை திருமணத்தைக் கண்டித்தார்.
விதவைகளின் மறுமணத்தை ஆதரித்தார். ஆர்ய சமாஜ், யங் இந்தியா, அன்ஹேப்பி இந்தியா போன்ற நூல்களையும் எழுதினார்.
காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்த அவரது தாயின் நினைவாக, பெண்களுக்கான காசநோய் மருத்துவமனை ஒன்றை நடத்த எண்ணினார்.
1927 ஆம் ஆண்டு அதற்காக ஒரு அறக்கட்டளையை நிறுவினார். 1937 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனை திறக்கப்பட்டது.
மேலும் பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் லட்சுமி காப்பீட்டு நிறுவனம் ஆகியவற்றையும் நிறுவினார்.
உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம்
உலக குறைப்பிரசவ குழந்தைகள் தினம் நவம்பர் 17ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ஆண்டிற்கு 15 மில்லியன் குறைப்பிரசவ குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது 10ல் ஒரு குழந்தை குறைப்பிரசவத்தில் பிறக்கிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் பல்வேறு நோய்கள் தொற்றிக்கொள்ளும். எனவே அந்நோய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
முருகப் பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ் காலமான தினமின்று.
பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு!
இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்! கர்நாடக பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, அதை பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, பாடிக் காட்டியவர்! இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, “ஓ” போட வைச்சது!
தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்.
தியாகராஜர் விருது, கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்பட பல இசை விருதுகளை பித்துக்குளி முருகதாஸ் பெற்றுள்ளார்
“நான்” என்ற சொல்லே அவர் வாயில் வராது! ஒன்லி “அடியேன்”! இல்லீன்னா தன்னையே கூட “அவன்”-ன்னு தான் சொல்லிப்பார்!
இவர் கச்சேரிக் காசு பலவும் போகுமிடம் = அனாதைச் சிறார் விடுதிக்கு
ஒட்டு மொத்த உலக மக்களை மிரட்டி முடக்கி வைத்த கொடூர கொரோனாவுக்கு இன்று பர்த்டே.!
மனித இனத்திற்கே பேரழிவை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் உலகில் முதல் முதலாக அறியப்பட்ட தினம் இன்று தான் அதாவது கொரோனா வைரஸ்க்கு ஃபர்ஸ்ட் பர்த்டே. நவம்பர் 17ம்தேதி முதல் பிறந்த நாள்.
இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் லட்சக்கணக்காணோர் பேர் பலியாகி உள்ளனர். அதில் எனக்கு நெருங்கிய நண்பர்களுமுண்டு
கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் ஹுபே மாகாணத்தில் வூகானில் 2019ம் ஆண்டு நவம்பர் 17 தேதி கண்டுபிடிக்கப்பட்டது. 55 வயது பெண்ணுக்கு சார்ஸ் வகை நோய் (SARS-CoV-2 ) பாதித்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நவம்பரில் 4 ஆண்கள் மற்றும் 5 பெண்களுக்கு கொரோனா பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனினும் முதல் நபர் 55 வயது பெண் தானா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.
வூகானில் உள்ள இறைச்சி உணவு விற்பனை சந்தையில் இருந்து பரவியதாக சீன அதிகாரிகள் விசாரணைக்கு பின்னர் தெரிவித்தனர். அந்த வைரஸ் பரவ காரணமாக இருந்த வூகான் இறைச்சி சந்தை மூடப்பட்டது. வவ்வால் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக ஆதாரங்கள் காட்டுகின்றன. இந்த வைரஸ் காட்டுத்தீ போல் சீனாவில் பரவிய நிலையில்,
அங்கிருந்து இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பரவியது.
இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி சீனாவில் இருந்து கேரளா வந்த மருத்துவ மாணவருக்கு கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் பின்னர் முழுமையாக பரவ தொடங்கியது மார்ச் மாதத்தில் தான். மார்ச் மாதத்தில் வெறும் 500 பேருக்கு பரவி இருந்த கொரோனா பின்னாளில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல லட்சம் பேரை பாதிக்க தொடங்கி இன்னும் முழுமையாக விலக வில்லை என்பதுதான் சோகம்.
