குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம்: சர்ச்சைக்குரிய 9 தேர்வு மையங்கள் ரத்து.
தமிழகத்தில், 18,884 இலங்கை தமிழர்கள் உட்பட 1.98 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 2 கோடியே 30 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது – தமிழக உணவுத்துறை.
பெண்களுக்கு முதிர்வுதொகை வழங்கும் திட்டம்: 2 பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு ரூ.50ஆயிரம் வழங்கும் திட்டத்தின் கீழ், 24 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்க சமூகநலத்துறை ஏற்பாடு.
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை அறிவிப்பு.நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு பாதுகாப்பு வீரரும் காவல்துறை சிறப்பு அதிகாரி ஒருவரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
சென்செக்ஸ் புள்ளிகள், 208.43 குறைந்து 41,115 புள்ளிகளுடனும், நிஃப்டி 62.95 புள்ளிகள் குறைந்து 12,106 புள்ளிகளுடன் நிறைவு.
ஒத்திவைக்கப்பட்ட, 335 உள்ளாட்சி பதவிகளுக்கு வரும், 30ம் தேதி மறைமுக தேர்தல் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
நடப்பாண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 27, 28ல் நடைபெறும் என உத்தேச பட்டியல் வெளியீடு.
சிஏஏவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மீண்டும் மறுப்பு! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு.
குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 144 மனுக்கள்.இவ்வளவு மனுக்கள் ஏன் என்ற காரணத்தை அறிய முடியவில்லை – உச்சநீதிமன்றம். மனுக்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி. அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமான உத்தரவு பிறப்பிக்க போவதில்லை – தலைமை நீதிபதி. 144 மனுக்களில், 60 மனுக்கள் மட்டுமே அரசுக்கு டுக்கப்பட்டுள்ளன – மத்திய அரசு வழக்கறிஞர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் – மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல். குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வழக்குகள், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு. மனுக்கள் மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு 4 வாரகால அவகாசம் அளித்து உத்தரவு.