உடலுறுப்பு தானம்: ”ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான்” –

உடலுறுப்பு தானம்: ”ஏழு பேர் உடலில் உயிராக இருக்கான்” – மகனுக்கு இறுதிச் சடங்கு செய்யாத பெற்றோர்

ராமநாதபுரத்தில் விபத்தில் உயிரிழந்த சரத்குமார் என்ற இளைஞரின் உடல் உறுப்புகள் ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு ஏழு பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இதனால் உயிரிழந்த சரத்குமார் ஏழு பேரின் உடலில் உயிருடன் இருப்பதாகக் கூறி அவருக்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்கு செய்யவில்லை.
மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளிக்கும் குடும்பங்களின் எண்ணிக்கை தமிழகத்தில்அதிகரித்து வருகிறது.இதே போல் விபத்தில் மூளைச்சாவு அடைந்த 21 வயது பரமக்குடி இளைஞரின் உடல் உறுப்புகளைத் தானமாகப் பெற்று ஏழு பேர் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்த காந்தி நகரைச் சேர்ந்த 21 வயது இளைஞர் சரத்குமார். வெற்றிவேல் மற்றும் ராஜேஸ்வரி தம்பதியின் மகனான இவர், சிவகங்கையில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.
இளைஞர் சரத்குமார் கடந்த ஜனவரி
11ம் தேதி சனிக்கிழமை இரவு 8 மணியளவில் வேலை முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இளையான்குடி சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இதில் சரத்குமாருக்கு பலத்த காயம் அடைந்த 2 மணிநேரமாக சாலையில் கிடந்துள்ளார். பின்னர் அந்த வழியாக சென்ற
ஆம்புலன்ஸ் ஒன்றில் சரத்குமாரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
Tags:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!