முனைவர் இறையன்பு & முனைவர் திருப்புகழ் அவர்களும் பேசுகிறார்கள்
குழந்தையை மனிதன் ஆக்குவது கல்வி தான். மனிதன் அழக் கற்றுக் கொண்ட அளவிற்கு வாழக் கற்றுக் கொள்ளவில்லை. தலையை குனிந்து புத்தகங்கள் படித்தால், பலர் முன், தலை நிமிர்ந்து நிற்கும். சாதாரண மனிதனான காந்தியை மகாத்மா ஆக்கியதும், தாகூரை மேதையாக்கியதும் புத்தகங்கள் தான். அடிமைப்பட்டுக் கிடந்த அமெரிக்கா, ரஷ்யாவில் புரட்சியை ஏற்படுத்தியது புத்தகங்கள்.
அதை உணர்ந்த அனைவரும் அதிகமாக புத்தகங்கள் படிக்க தொடங்கியுள்ளனர். அதற்கு சாட்சியாக கடந்த வருட சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையே ஆகும்.
விஞ்ஞான வளர்ச்சியாலும் அனைவருக்கும் நேரம் குறைவாலும் புத்தகத்தின் அடுத்தக் கட்ட வளர்ச்சியாக மின்னூலாகவும் ஒலிப் புத்தகமாகவும் அலைபேசியில் படிக்கற கேட்கிற அளவிற்கு வளர்ந்துள்ளது.