பொங்கல் பரிசு தொகுப்பை வாங்குவதற்கான தேதி நீட்டிப்பு! பொங்கல் பரிசு தொகுப்பை வருகிற 21ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம்.ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசை பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டித்து அரசு உத்தரவு.பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் நீட்டிப்பு.
2020ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட்-30, ஜனவரி 17ம் தேதி அதிகாலை 2:35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது – இஸ்ரோ. பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஜிசாட்-30 செயற்கைக்கோளை இஸ்ரோ ஏவ திட்டம்.
சென்னையில் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் பஸ் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் – மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகையை குறைப்பது தொடர்பாக மத்திய அரசிடம் சில விளக்கங்களை கேட்டிருக்கிறோம். விரைவில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராத தொகை குறைக்கப்படும் – அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.30,408 ஆக விற்பனை.
சாலை பாதுகாப்பில் சிறந்து விளங்கும் மாநிலத்திற்கான விருது தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டது. டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரியிடம், விருதை பெற்றார் தமிழக போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில், 4 பேருக்கு ஆயுள் தண்டனை. தஞ்சை மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.2018ம் ஆண்டு, வங்கி பணி பயிற்சிக்காக கும்பகோணம் வந்த டெல்லி பெண் பாலியல் வன்கொடுமை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு.
இளைஞர் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் காணொலியில் தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி .சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்த 4 நாளில் இளைஞர் விளையாட்டுத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டு இன்று மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது.
கருவாட்டுச்சந்தையில், ஒரு கோடி ரூபாய் வருமானம்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடலூர், காராமணிக்குப்பத்தில் விடிய விடிய நடைபெற்ற கருவாட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் எதிரொலி. ராமநாதபுரம், கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 பேர் சென்னைக்கு வரவழைப்பு சென்னையில், 35 பேரிடம் டி.என்.பி.எஸ்.சி விசாரணை தொடங்கியது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை கண்காணிக்க குழு அமைப்பு.கால்நடை வளர்ப்புத்துறையின் முன்னாள் கூடுதல் இயக்குநர் ரவீந்திரன் தலைமையில், 15 பேர் கொண்ட குழுவை இந்திய விலங்குகள் நல வாரியம் அமைத்துள்ளது.
ஈராக் விமான தளம் மீது அமெரிக்க ராணுவத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல்.அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் தணிந்து வரும் நிலையில் மீண்டும் தாக்குதல்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஶ்ரீகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரருக்கான ‘பாலி உம்ரிகர்’ விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.
மதுரை: இன்று ஜல்லிகட்டு காளைகளுக்கு முன்பதிவு செய்யப்படுவதால், அலங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.
கிருஷ்ணகிரியில் டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி திட்டத்தில் மகப்பேறு உதவி தொகை வழங்குவதில் பல லட்சம் மோசடி.மோசடி தொடர்பாக 2018ம் ஆண்டு புகார் அளித்த நாகவேனி என்ற செவிலியர் தற்காலிக பணியிடை நீக்கம், 21 செவிலியர்களுக்கு மெமோ வழங்கி சுகாதார துறை நடவடிக்கை.
காஷ்மீர்: புல்வாமா பகுதியில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல்.
யோகா பயிற்சி என்பது மோடிக்காக அல்ல; நமது BODYக்காக.பீட்ஸா, பர்கர் போன்ற உணவுகள் மற்ற நாட்டு தட்பவெப்ப சூழலுக்கு ஏற்றவை; நமக்கு அல்ல – துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு.
ஐயப்பன் கோவிலில் நாணயங்களை எண்ணும் பணி: நாணயங்கள் ரூ.8 கோடி இருக்கும் என கணக்கீடு.
ஓமன் தலைமை சுல்தான் மறைவுக்கு நாளை அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அறிவிப்பு.தேசியகொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும், நாளைய பொழுது போக்கு நிகழ்வுகள் அனைத்தும் ரத்து – மத்திய அரசு.
கொல்கத்தா துறைமுகம் இனி ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும்: கொல்கத்தா துறைமுகக் கழகத்தின் 150ம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு.
ஜனவரி 15, 16, 17ம் தேதிகளில் அரசு விடுமுறை என்பதால் மெட்ரோ ரயிலில், 50% கட்டண தள்ளுபடி வழங்கப்படும்.ஜன.17 காணும் பொங்கலன்று மெரினா கடற்கரைக்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பயணிகளுக்கு CAB இயக்கப்படும். மெட்ரோ ரயில் நிர்வாகம்.
பொங்கல் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளில் இதுரை 2.81 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.பயணம் மேற்கொள்ள 1.75 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் – போக்குவரத்துத்துறை.