இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )

 இன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 19 சனிக்கிழமை 2024 )

தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் அக்டோபர் 19-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.

குரோதி வருடம் ஐப்பசி மாதம் 01 ஆம் தேதி வியாழக்கிழமை 18.10.2024 சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.16 வரை பிரதமை. பிறகு துவிதியை.இன்று மாலை 04.01 வரை அஸ்வினி. பின்னர் பரணி.உத்திரம் அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

மேஷ ராசி அன்பர்களே!

காரிய அனுகூலமான நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். வியாபாரத்தில் பணியாளர்களாலும், பங்குதாரர்களாலும் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். சக வியாபாரிகளால் மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சிலருக்கு வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சு வார்த்தை சுமுகமாக முடியும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

அதிர்ஷ்டகரமான நாள். இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். தொடங் கிய காரியங்கள் அனுகூலமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபல மாக இருப்பார். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்றாலும் பாதிப்பு இருக்காது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கடக ராசி அன்பர்களே!

தந்தை வழி உறவுகளால் சங்கடம் ஏற்படக்கூடும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசி அன்பர்களே!

சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். உறவினர் களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம் வியாபாரத்தில் விற்பனை சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம். வெளியூர்ப் பயணம் மேற்கொள் வதைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

துலா ராசி அன்பர்களே!

உற்சாகமான நாள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வாழ்க்கைத் துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகையும் பண உதவியும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மாலையில் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவீர்கள். எதிரிகள் பணிந்து போவார்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.

தனுசு ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சகோதரர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.

மகர ராசி அன்பர்களே!

புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். உறவினர் களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப் பிடிக்கவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். அலுவல கத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.

கும்பராசி அன்பர்களே!

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கி, அந்நியோன்யம் அதிகரிக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிக ரிக்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. அலுவலகத்தில் சக ஊழியர்களின் பணிகளையும் நீங்களே செய்யவேண்டி வரும். அதனால் அசதி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மீனராசி அன்பர்களே!

பொறுமையுடன் இருக்கவேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். முக்கிய முடிவுகளை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணிகளிலும் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். பங்குதாரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

 

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...