நவராத்திரி ஸ்பெஷல் – வெள்ளை 1.கொண்டைக்கடலை சுண்டல்
நவராத்திரி ஸ்பெஷல் – வெள்ளை 1.கொண்டைக்கடலை சுண்டல்
தேவையான பொருட்கள்:-
வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு -தாளிக்க
உளுந்து -தாளிக்க
பெருங்காயம் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2டீஸ்பூன்
கறிவேப்பிலை -ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:-
கொண்டைக்கடலையை 8 மணி நேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவிடவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- சோயா பீன்ஸ் சுண்டல்
தேவையான பொருட்கள்:-
வெள்ளை காய்ந்த சோயா பீன்ஸ் – 1 கப்
பெரிய வெங்காயம்- 1 கப் ( நறுக்கியது)
துருவிய தேங்காய் – 5 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்- 5
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – தாளிப்பதற்கு
செய்முறை:-
சோயா பீன்ஸ் 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 1 விசில் மட்டும் வர மிதமான தீயில் வேகவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் சேர்த்து, கடுகு ,கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ,பெருங்காயம் தாளித்து
வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி அதனுடன் வேக வைத்த சோயா பீன்ஸ் தேங்காய் துருவல் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் வதக்கி இறக்கவும்.
சுவையுடன் ஆரோக்கியமான சோயா பீன் சுண்டல் தயார்.
by
மஞ்சுளா யுகேஷ்