இன்றைய முக்கிய செய்திகள்
தமிழக காவல்துறையின் சார்பு ஆய்வாளர் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு.தேர்வர்கள் tnusrbonline.org இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.காவல்துறையினருக்கு வரும் 11ம் தேதியும், பொது விண்ணப்பதாரர்களுக்கு 12ம் தேதியும் எஸ்.ஐ. தேர்வு நடைபெறுகிறது.
முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் நியமனம். முப்படைகளுக்கும் ஒரே தலைமைத் தளபதி – மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
வாக்கு எண்ணிக்கை – மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி. உயர்நீதிமன்றம் மதுரை கிளை: வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது? மாநில தேர்தல் ஆணையம்: குறைந்த கால அவகாசமே உள்ளதால் வீடியோ பதிவுக்கு வாய்ப்பில்லை.””
தூத்துக்குடி: வேலன்புதுக்குளம் வாக்குச்சாவடி முறைகேடு தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம். மீதமுள்ள அதிகாரிகள் மீது துறைரீதியிலான நடவடிக்கை – ஆட்சியர் சந்தீப் நந்தூரி.
உ.பி.: லக்னோவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரியங்கா காந்திக்கு அபராதம். ஹெல்மெட் அணியாமல் பயணித்த பிரியங்கா காந்திக்கு ரூ.6,100 அபராதம் விதித்தது லக்னோ காவல்துறை.
ஜார்கண்ட் மாநிலத்தின், 11வது முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, அசோக் கெலாட், பூபேஷ் பாகல், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு.