மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்

 மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்
மூன்று C-க்களையும் கண்டு பயம் வேண்டாம்… வங்கி அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்
வங்கிகள் தொடர்பான முறைகேடு வழக்குகளில், அதிகாரிகள் தேவையின்றி சிபிஐ, சிவிசி, சிஏஜி ஆகியவற்றைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை என்றும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அடுத்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக பல்வேறு தரப்பினருடனும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைவர்கள் உடன் அவர் ஆலோசனை நடத்தினர். இதில் சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் சுக்லாவும் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீத்தாராமன், வங்கிகளின் வாராக்கடன் அளவு, கடந்த 2018-ம் ஆண்டைக் காட்டிலும், 2019-ம் ஆண்டில், ஒரு லட்சத்து 69 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருப்பதாகவும், கடன் வசூல் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர்,  ரூபே (RuPay), பீம் யுபிஐ (Bhim UPI), ஆதார் பே, டெபிட் கார்டு (DebitCard), நிப்ட் (NEFT), ஆர்டிஜிஎஸ் (RTGS) உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிமாற்ற முறைகளில்,  வாடிக்கையாளர்களுக்கு உள்ளது போன்று, வர்த்தக நிறுவனங்களுக்கான தள்ளுபடி சலுகை ஜனவரி முதல் தேதியில் இருந்து அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

வங்கி முறைகேடு உள்ளிட்ட விவகாரங்களில் சி.பி.ஐ. தாமாக முன்வந்து வழக்கு எதையும் பதிவு செய்யாது என்று உறுதியளித்த நிர்மலா சீதாராமன், சி.பி.ஐ. சிவிசி, சிஏஜி (பொதுவாக 3 C என்று அழைக்கப்படும்) உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கை எடுத்து விடுமோ என்ற அச்சத்தை வங்கி அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றார்.
இதனிடையே மத்திய நிதியமைச்சக விடுத்துள்ள அறிக்கையில், அடுத்தடுத்த மாதங்களில், வங்கி அதிகாரிகளோடு, ஆலோசனை கூட்டங்களையும், பயிற்சி பட்டறைகளையும் சிபிஐ அமைப்பு முன்னெடுக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகளாலோ, அல்லது, பிற புலனாய்வு அமைப்புகளாலோ பாதிக்கப்பட்டால், வங்கி அதிகாரிகள் புகார் அளிக்க, பிரத்யேக எண் தொலைபேசி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...