கிருஷ்ண ஜெயந்திபலகாரங்கள்
- வெல்ல சீடை
தேவையானவை:-
அரிசிமாவு-ஒருகப்.
வறுத்த உளுந்து-2 டேபிள்ஸ்பூன்
வெணணை-25கிராம்.
உப்பு-1சிட்டிகை.
ஏலக்காய் பொடி-1 டீஸ்பூன்.
பொடித்த வெல்லம்-1/2கப்.
தேங்காய்ப்பால் – கால்கப்.
சமையல் எண்ணை( அ )நெய்- பொறிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை:-
வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, வறுத்த உளுந்து மாவு, வெண்ணெய், உப்பு, ஏலக்காய்ப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
மாவு பிசைய தேவையான அளவு தேங்காய்ப்பாலுடன், வெல்லத்தை கரைத்து கலந்துவைத்துள்ள மாவில் ஊற்றி பதமாக சப்பாத்தி மாவு போல பிசைந்துகொள்ளவும். சிறு சிறு உருண்டையாக உருட்டி சுத்தமான துணியில் பரப்பி 2-3 மணி நேரம் அப்படியே விட்டு விடவும். (ஈரப்பதத்தை துணி உறிஞ்சியதும் வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அடுப்பை பற்றவைத்து, சூடானதும் வாணலி கொள்ளும் அளவுக்கு சீடையைப் போட்டு மொறுமொறுப்பாகப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
1.மரவள்ளிக்கிழங்கு முறுக்கு
தேவையானவை:-
மரவள்ளிக்கிழங்கு – 1/4கிலோ
பச்சரிசி மாவு -1/2 கிலோ
இஞ்சி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் -5
ஓமம் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – 1/2 லிட்டர்
வெண்ணெய் – 50 கிராம்
செய்முறை:-
இஞ்சி, பச்சை மிளகாய், ஓமத்தை விழுதாக அரைத்துக்கொள்ளவும். மரவள்ளிக்கிழங்கை வேகவைத்து துருவி அதில் அரிசி மாவு, அரைத்த விழுது, உப்பு, வெண்ணெய் சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் மாவை சிறு சிறு முறுக்குகளாகப் பிழிந்து சிவக்க பொரித்தெடுக்கவும்.
2.* சிறுதானியச் சீடை*
தேவையானவை:-
வரகரிசி மாவு -2கப்
உளுந்து-1/2கப்
உப்பு- தேவையான அளவு
வெண்ணை-1/2டீஸ்பூன்.
செய்முறை:-
கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும் வரகரிசி மாவைச் சலித்து இலேசாக வறுத்துக்கொள்ளவும். உளுந்தை இரண்டு நிமிடங்கள் வறுத்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வரகரிசி மாவு, உளுந்து மாவு, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். அதனுடன் வெண்ணெய் சேர்த்து கையால் கிளறவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவுப் பதத்துக்குப் பிசையவும். பிறகு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் உருண்டைகளைப் போடும் போது வெடிக்காமல் இருக்க அதில் ஊசியால் சிறு சிறு ஓட்டைகள் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். இதை காற்றுப்புகாத பாத்திரத்தில் வைத்து தேவையானபோது சாப்பிடலாம்.
- கோதுமை வெல்ல அப்பம்
தேவையானவை:-வெல்லம்-3/4கப்
கோதுமை- ஒருகப்
செய்முறை:-
வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்துக் கரைத்து வடிக்கட்டிக்கொள்ளவும்.
கோதுமை மாவுடன் ரவை, அரிசி மாவு தலா கால் கப், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் வெல்லக் கரைசல், காய்ச்சி ஆறவைத்த பால் ஒரு டேபிள்ஸ்பூன் சேர்த்து கரண்டியால் நன்கு கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவுப் பதத்தைவிட சற்றுக் கெட்டியாகக் கரைத்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குழி கரண்டியில் மாவை எடுத்து ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக வேகவைத்து எடுத்தால்
சுவையான கோதுமை இனிப்பு அப்பம் தயார்.
- முருங்கையிலை தட்டை
தேவையானவை:-
அரிசி மாவு – ஒரு கப்
முருங்கையிலை சுத்தம் செய்தது – ஒரு கப்
வறுத்து அரைத்தத உளுத்தமாவு – 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1/4டீஸ்பூன்
வெள்ளை எள் – 1 டீஸ்பூன்
சீரகம் -1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1 /2டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:-
அரிசிமாவு,உளுந்தமாவு,பொட்டுக்கடலை,சீரகம் ,பெருங்காயம், எள்,முருங்கை இலை, கறிவேப்பிலை, மிளகாய்தூள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து அதினுடன் 2டீஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி இதனுடன் சேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர்விட்டு மாவாகப் பிசைந்துகொள்ளவும். மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி சிறிய பூரி வடிவில் தட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி தட்டைகளைப் பொரித்தெடுத்தால் சுவையான தட்டை தயார்.
5.தேங்காய் பர்ஃபி
தேவையான பொருள்கள்:-
தேங்காய் துருவல் – 3 கப்
சர்க்கரை – 3 கப்
கடலை மாவு – 1டேபுள் ஸ்பூன்
நெய் – தேவையான அளவு
ஏலக்காய் பொடி-ஒரு சிட்டிகை
உடைத்த முந்திரி – தேவைக்கேற்ப
செய்முறை:-
சர்க்கரையை சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வரும்வரை பாகு காய்ச்சவும்.அதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து, சிறிது நெய்விட்டு, அதில் கடலை மாவைப் போட்டு வறுத்து, தேங்காய்க் கவலையில் கொட்டி, அதனுடன் சிறிது ஏலக்காய்த் தூளையும் சேர்த்துக் கிளறுங்கள். அப்போது பர்ஃபி பாத்திரத்தில் ஒட்டாமல் இருக்கும். சுருண்டு வரும் வேளையில், ஒரு தட்டில் நெய் தடவி,அதை சமமாக தட்டில் துண்டுகள் போடவும். அதன்மேல் முந்திரி பருப்பை மேலே தூவ வேண்டும். இப்போது, சுவையான தேங்காய் பர்ஃபி ரெடி!
6.திரட்டுப்பால்
திரட்டிப்பால் என்பது கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்த ஒரு உணவுப்பொருள். இது கிருஷ்ண ஜெயந்தி படையலில் கட்டாயம் இடம் பெறுகின்ற ஒரு இனிப்பு வகையாக இருக்கும்.
தேவையான பொருள்கள்:-
பால் – 1 லிட்டர்
வெல்லம் – 300 கிராம்
ஏலக்காய் பொடி – சிறிது
நெய் – தேவையான அளவு
முந்திரி – தேவையான அளவு
செய்முறை:-
அடி கனமான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, 1 லிட்டர் பாலை ஊற்றி, அதை சிறு தீயினில் வைத்து நன்கு காய்ச்ச வேண்டும். பால் நன்கு கொதித்து நன்கு பால் மூன்றில் ஒரு பங்காக சுண்டுகிற வரையில், காய்ச்ச வேண்டும்.
பால் நன்கு சுண்டியதும் அதில் வெல்லம் மற்றும் ஏலக்காய்த் தூள் போட்டு நன்கு கிளற வேண்டும்.
இப்போது பால் நன்கு சுண்ட ஆரம்பித்து சுருண்டு வரும். அப்போது அடுப்பில் இருந்து இறக்கி, நெய்விட்டு கிளறி, அதன்மேல், முந்திரி விட்டு கிளறவும்.
சுவையான திரட்டுப் பால் ரெடி.
மஞ்சுளா யுகேஷ் (துபாய்)