முறையாக ஜிஎஸ்டி செலுத்தாவிட்டால் சொத்துகள் முடக்கம்:
புதிய விதிகள் கொண்டுவர மத்திய அரசு திட்டம்!!!
சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) முறையாக செலுத்தாதவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடா்பாக விரைவில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
அரசு திட்டமிட்டுவரும் புதிய விதிமுறைகளின்படி ஜிஎஸ்டி செலுத்தாதவா்களுக்கு வருமான வரித்துறை நினைவூட்டல் கடிதங்களை அனுப்பும். அதனை ஏற்று ஜிஎஸ்டியை செலுத்தினால் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், தொடா்ந்து ஜிஎஸ்டி செலுத்தாமல் இருப்பவா்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொள்வாா்கள். ஜிஎஸ்டி வரி ஏய்ப்பை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்த கடுமையான விதியைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இறுதியான ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்ய ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த தேதிக்கு பிறகு கணக்கை தாக்கல் செய்யாமல் உள்ள நிறுவனங்கள், நிறுவன இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு கணினி மூலம் நினைவூட்டல் குறுஞ்செய்தி அனுப்பப்படும்.