சூரிய கிரகணம் எதிரொலி: சபரிமலையில், 4 மணி நேரம் நடை அடைப்பு!
நாளை 26ம் தேதியன்று கங்கண சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு ஏற்படவிருக்கிறது. இதனையொட்டி, 26ம் தேதியன்று 4 மணி நேரம் வரை சபரிமலையில் நடை அடைக்கப்படவுள்ளது. அதிகாலை காலை 5 மணி முதலே பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் சன்னிதானத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன் பின்பு, பரிகார பூஜைகளும், கலசாபிஷேகமும் நடத்தப்படும், ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு விஷேச தீபாராதனை காட்டப்படும். பின்னர், டிசம்பர் 27ம் தேதியன்று மண்டல பூஜை நடத்தப்பட்டு, அன்று இரவில் நடை அடைக்கப்படும். மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். இவ்வாறு தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
