உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் கோலாகலக் கொண்டாட்டம்
இயேசுபிரான் அவதரித்த நாளாம் கிறிஸ்துமஸ் பண்டிகை உலகெங்கும் இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏசுபிரான் பிறந்த இடமான பெத்லஹேமில் நடத்தப்பட்ட நள்ளிரவு சிறப்புப் பிரார்த்தனையில் பல்வேறு நாடுகளில் இருந்து 10,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாலஸ்தீனம் அருகே உள்ள மேற்குக் கரைப் பகுதியில் உள்ள மேங்கர் சதுக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த பழமையான தேவாலயத்தில் சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. தொடர்ந்து தேவாலயத்தில் இருந்த மிகவும் பழமையான மணி இசைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், பிரதமர் முகமது சதய்யே ஆகியோரும் பங்கேற்றனர்.வாட்டிகன் நகரில் உள்ள
செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் நடைபெற்ற நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனையில் போப் பிரான்ஸிஸ் பங்கேற்றார். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளானோர் போப்பாண்டவரின் அருளுரையைக் கேட்க திரண்டிருந்தனர்.அப்போது பேசிய போப் பிரான்சிஸ், ஏசுபிரான் அனைவரையும் நேசிப்பதாக குறிப்பிட்டார்.
ஏசுவின் அன்பிற்கு முன் அனைத்து பிரச்சனைகளும் இரண்டாம் பட்சமாகி விடுவதாக போப் தெரிவித்தார்.