குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் போஸின் பேரன்

பாஜகவில் இருந்துகொண்டே குடியுரிமை திருத்த சட்டத்தை விமர்சிக்கும் போஸின் பேரன்
பாரதிய ஜனதா கட்சியின் மேற்கு வங்க மாநில துணை தலைவர் சந்திர குமார் போஸ் இந்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை விமரிசித்துள்ளார். இவர் விடுதலைப் போராட்ட வீரரும் சுபாஷ் சந்திர போஸின் சகோதரருமான சரத் சந்திர போஸின் பேரன் ஆவார்.குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எந்த மதத்துடனும் தொடர்பில்லை என்றால் அதில் ஏன் இந்து, சீக்கியர், கிறிஸ்தவர், பௌத்தர், சமணர் மற்றும் பார்சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் இதில் ஏன் முஸ்லிம்கள் சேர்க்கப்படவில்லை என்றும் தனது ட்விட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவை வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிட வேண்டாம். இது அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்களை ஏற்றுக்கொள்ளும் நாடு என்று இன்னொரு ட்விட்டர் பதிவில் 
அவர் கூறியுள்ளார்.”முஸ்லிம்கள் தங்கள் நாட்டில் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றால் அவர்கள் இங்கு வர மாட்டார்கள். அவர்களையும் சேர்ந்துக்கொள்வதில் தவறில்லை. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் பலூச் இன மக்களின் நிலை என்ன? பாகிஸ்தானில் உள்ள அகமதியா மக்களின் நிலை என்ன ?,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்திர குமார் போஸ் 2016இல் நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!