வரலாற்றில் இன்று (28.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 28 (July 28) கிரிகோரியன் ஆண்டின் 209 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 210 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1540 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னரின் ஆணைப்படி இங்கிலாந்தின் முதலமைச்சர் தோமசு குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் என்றி கத்தரீனை தனது ஐந்தாவது மனைவியாக மணந்தார்.
1635 – எண்பதாண்டுப் போர்: எசுப்பானியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செங்கென்சான்சு என்ற இடச்சுக் கோட்டையைக் கைப்பற்றியது.
1794 – பிரெஞ்சுப் புரட்சி: பிரெஞ்சு செயற்பாட்டாளர் மாக்சிமிலியன் உரோப்சுபியர் பாரிசு நகரில் கில்லட்டின் மூலம் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்.
1808 – இரண்டாம் மகுமுது உதுமானியப் பேரரசின் சுல்தானாகவும், இசுலாமியக் கலீபாவாகவும் நியமிக்கப்பட்டார்.
1809 – தலவேரா சமரில் சர் ஆர்தர் வெல்லெசுலியின் பிரித்தானிய, போர்த்துக்கீச, எசுப்பானிய படைகள் யோசப் பொனபார்ட்டின் படைகளைத் தோற்கடித்தன.
1821 – ஜோஸ் டெ சான் மார்ட்டின் எசுப்பானியாவிடம் இருந்து பெருவின் விடுதலையை அறிவித்தார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டமைப்புப் படைகள் அட்லான்டாவில் இருந்து அமெரிக்கப் படைகளைத் துரத்தும் முயற்சியில் மூன்றாம் முறையாகத் தோல்வி கண்டன.
1868 – ஆபிரிக்க அமெரிக்கர்களுக்குக் குடியுரிமை வழங்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
1914 – செர்பியா மீது ஆத்திரியா-அங்கேரி போர் தொடுத்தது. முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
1915 – ஐக்கிய அமெரிக்காவின் எயிட்டி மீதான 19-ஆண்டுகால ஆக்கிரமிப்பு ஆரம்பமானது.
1917 – ஆபிரிக்க அமெரிக்கர் மீது நடத்தப்படும் படுகொலைகள் மற்றும் வன்முறைகளை எதிர்த்து நியூயார்க்கில் அமைதியான போராட்டங்கள் இடம்பெற்றன.
1938 – அவாய் கிளிப்பர் அமெரிக்கப் பறக்கும் படகு குவாமிற்கும் மணிலாவிற்கும் இடையில் 15 பேருடன் காணாமல் போனது.
1941 – இரண்டாம் உலகப் போர்: வியட்நாமில் டொன்கின் நகரில் நிலை கொண்டிருந்த சப்பானியப் படைகள் பிரெஞ்சு இந்தோசீனாவைக் கைப்பற்றின.
1943 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் ஆம்பர்கு நகர் மீது பிரித்தானியா நடத்திய குண்டுத் தாக்குதலை அடுத்து அங்கு நெருப்புப்புயல் உண்டாகியதில் 42,000 பேர் உயிரிழந்தனர்.
1945 – அமெரிக்கப் போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் உயிரிழந்தனர், 26 பேர் காயமடைந்தனர்.
1948 – இலங்கை நாடாளுமன்றத்தில் முதல் தடவையாக உறுப்பினர்கள் சிங்கள மொழியில் உரையாற்றினர்.[1]
1957 – சப்பானின் மேற்கு கியூசூ, இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் உயிரிழந்தனர்.
1965 – வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.
1972 – இந்தியா-பாக்கித்தான் அரசுகளுக்கிடையே பண்ணுறவாண்மையை மேம்படுத்துவதற்காக சிம்லா ஒப்பந்தம் இரு நாடுகளுக்குமிடையே கையெழுத்திடப்பட்டது.
1976 – சீனாவில் டங்சான் நகரில் இடம்பெற்ற 8.2 அளவு நிலநடுக்கத்தில் 242,769 பேர் உயிரிழந்தனர், 164,851 பேர் காயமடைந்தனர்.
1984 – 1984 ஒலிம்பிக் போட்டிகள் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் ஆரம்பமானது. சோவியத் ஒன்றியம் கலந்து கொள்ளவில்லை.
1996 – தொல்பழங்கால மனிதனின் எச்சங்கள் வாசிங்டன் கெனெவிக் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
2001 – உலக நீச்சல் வாகையாளர் போட்டிகளில் ஆத்திரேலியாவின் இயன் தோப் ஆறு தங்கப் பதக்கங்களைப் பெற்ற முதலாவது நீச்சல் வீரர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
2002 – உருசியா, மாஸ்கோவில் வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 16 பேரில் 14 பேர் உயிரிழந்தனர்,[2]
2005 – ஐரியக் குடியரசுப் படை வட அயர்லாந்தில் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாக அறிவித்தது.
2006 – ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.
2010 – பாக்கித்தான் இசுலாமாபாத் வடக்கே பாக்கித்தானிய ஏர்புளூ விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 152 பேரும் உயிரிழந்தனர்.
2017 – ஊழல் குற்றச்சாட்டில் பாக்கித்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப்புக்கு உச்ச்சநீதிமன்றத்தினால் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

பிறப்புகள்

1635 – ராபர்ட் ஹூக், ஆங்கிலேய மருத்துவர், வேதியியலாளர் (இ. 1703)
1892 – கந்தையா கனகரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1962)
1902 – கார்ல் பொப்பர், ஆத்திரிய-ஆங்கிலேய மெய்யியலாளர் (இ. 1994)
1907 – ஏ. வி. மெய்யப்பச் செட்டியார், இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் (இ. 1979)
1928 – கல்யாண் குமார், தென்னிந்திய திரைப்பட நடிகர் (இ. 1999
1929 – ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், அமெரிக்காவின் முதல் சீமாட்டி (இ. 1994)
1930 – பிரோசா பேகம், வங்காளதேசப் பாடகி (இ. 2014)
1934 – வி. குமார், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 1996)
1936 – சோபர்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட வீரர்
1938 – ஆல்பர்ட் புஜிமோரி, பெருவின் 90வது அரசுத்தலைவர்
1951 – சந்தியாகோ கலத்ராவா, எசுப்பானியக் கட்டிடக் கலைஞர்
1954 – ஊகோ சாவெசு, வெனிசுவேலாவின் அரசுத்தலைவர் (இ. 2013)
1958 – டெர்ரி பாக்ஸ், கனடிய ஓட்ட வீரர், செயற்பாட்டாளர் (இ. 1981)
1971 – அபூ பக்கர் அல்-பக்தாதி, ஈராக்கின் இசுலாமிய அரசுத் தலைவர்
1974 – அலெக்சிசு சிப்ராசு, கிரேக்கத்தின் 186வது பிரதமர்
1983 – தனுஷ், தமிழகத் திரைப்பட நடிகர்
1986 – துல்கர் சல்மான், மலையாளத் திரைப்பட நடிகர்
1993 – ஹாரி கேன், ஆங்கிலேயக் காற்பந்து வீரர்

இறப்புகள்

1741 – ஆன்டோனியோ விவால்டி, இத்தாலிய இசையமைப்பாளர் (பி. 1678)
1750 – யோகான் செபாஸ்தியன் பாக், செருமானிய இசையமைப்பாளர் (பி. 1685)
1930 – ஆல்வார் குல்ஸ்ட்ரான்ட், நோபல் பரிசு பெற்ற சுவீடிய மருத்துவர் (பி. 1862)
1930 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய வேதியியலாளர் (பி. 1990)
1946 – அல்ஃ‌போன்சா, கத்தோலிக்க திருச்சபையின் முதலாவது புனிதப் பட்டம் கொடுக்கப்பட்ட முதலாவது இந்தியப் பெண் (பி. 1910)
1957 – எடித் அப்போட், அமெரிக்க பொருளியலாளர் (பி. 1876)
1968 – ஓட்டோ ஹான், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1879)
1972 – சாரு மசூம்தார், இந்தியச் செயற்பாட்டாளர் (பி. 1918)
1982 – சா. கணேசன், தமிழக அரசியல்வாதி, சமூக ஆர்வலர், தமிழ் இலக்கியவாதி (பி. 1908)
1999 – கா. ஸ்ரீ. ஸ்ரீ, தமிழக எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் (பி. 1913)
2004 – பிரான்சிஸ் கிரிக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1916)
2009 – லீலா நாயுடு, இந்திய நடிகை (பி. 1940)
2015 – கிளைவ் ரைஸ், தென்னாப்பிரிக்கத் துடுப்பாளர் (பி. 1949)
2016 – மகாசுவேதா தேவி, வங்காள எழுத்தாளர், சமூக ஆர்வலர் (பி. 1926)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (பெரு, 1821)
உலகக் கல்லீரல் அழற்சி நாள்
உலக இயற்கை வளம் பாதுகாப்பு நாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!