ரஜினியை போட்டு வறுத்தெடுக்கும் ட்விட்டர்வாசிகள்; ஆதரவுக்கும் பஞ்சமில்லை பாருங்க!
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதற்கு பல்வேறு எதிர்வினைகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்த சட்டம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பௌத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்ற சமயப் பிரிவினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கு வழி செய்கிறது.
இதற்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெங்களூருவில் போராட்டங்களை ஒடுக்கும் வகையில் நேற்று காலை முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் டவுன் ஹால் பகுதியில் போராட்டம் நடத்திய நபர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழியாகி விடக் கூடாது.