போராட்ட பயத்தால் ஏர்டல் உதவியை நாடிய போலீஸ்!

    குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் எடுத்துள்ள போராட்டத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள டில்லி காவல் துறை, தொலைத் தொடர்பு நிறுவனங்களை வைத்துக் குறிப்பிட்ட இடங்களில் மொபையில் சேவையை முடக்கியுள்ளது.

    குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இந்த சூழலில், டில்லி காவல் துறை போராட்டம் பரவுவதைக் கட்டுப்படுத்த ஏர்டல் உள்ளிட்ட தனியார் தொலைத் தொடர்பு நிறுவனஙளின் உதவியை நாடியுள்ளது. காவல் துறை தொடர்பு கொண்டதை ட்விட்டரில் வெளியிட்ட ஏர்டல் நிறுவனம் அந்த ட்வீட்டை சிறுதி மணி நேரத்தில் நீக்கியது.

   குடியுரிமை சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய நள்ளிரவே, மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்தது. குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது நாட்டில் பெரும்பாலானோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அஸாம், மிசோரம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக எதிர்வினையைப் பெறத் தொடங்கியது.

    இதற்கு எதிராக மாநிலந்தோறும் மக்கள் லட்சக் கணக்கில் தெருக்களில் இறங்கிப் போராடத் தொடங்கினர். அதே வேளையில் நாடு முழுவதிலும் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் குதிக்க தொடங்கியது. குறிப்பாக டில்லியில் ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   ஜாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர் நடத்திய போராட்டத்தைக் கட்டுப்படுத்தாகக் கூறி, டில்லி காவல் துறை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தி அவர்களை கலைக்க முடிந்தது.

   எனினும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டில்லியில் பல்வேறு பல்கலைக்கழங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. தொடர்ந்து, மாணவர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இணையத்தில் போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வருவதாக டில்லி காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

    இதனால் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வரும் டில்லி காவல் துறை ஏர்டெல் உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளது. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் டில்லியில் குறிப்பிட்ட பகுதிகளில் சிலவற்றில் மொபையில் சேவையைத் துண்டிக்க அறிவுறுத்தியுள்ளது. போராட்டத்தைக் காரணம் காட்டி டில்லி காவல் துறை இந்த செயலை செய்துள்ளது.


    இந்த சம்பவம் குறித்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் ட்விட்டரில் பதிவு ஒன்றைப் பதிவிட்டது. பின்னர், சில மணி நேரங்களில் அந்த பதிவை ட்விட்டரிலிருந்து நீக்கியது. இதற்கிடையே போராட்டம் காரணமாக டில்லி காவல் துறை பல்வேறு கெட்டுப்பிட்டிகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

   தொலைத் தொடர்பு சேவை முடங்கியதால் டில்லி மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தொடர்ந்து வரும் நாட்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!