தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும்
எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலுக்கு வரும் – பாஜக திட்டவட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படுவதோடு, எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் அமல்படுத்தப்படும் என பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து இந்தியாவில் வசிக்கும் சீக்கிய அகதிகளின் பிரதிநிதிகள், பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி.நட்டாவை நேற்று சந்தித்தனர்.
பின்னர் பேசிய ஜே.பி.நட்டா, அண்டை நாடுகளில் வசிக்கும் சிறுபான்மையினர் நிலையை பற்றிக் கவலைப்படாமல், சில கட்சிகள் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதாக குற்றம்சாட்டினார்.எதிர்காலத்தில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமும் அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நாடு முழுவதும் உடனடியாக செயல்படுத்தும் திட்டம் ஏதும் இல்லை என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கே.ரெட்டி தெரிவித்துள்ளார்.