கனமழைக்கு வாய்ப்பு!
நாளை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வருகிற 20ம் தேதி அன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் 3 செ.மீட்டரும், பாம்பன், தொண்டியில் 1 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், வருகிற 20ம் தேதி அன்று கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.சென்னை நகரின் அதிகபட்ச வெப்பநிலை 87.8 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.