கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்… சீமான் நகைச்சுவை!

 கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்… சீமான் நகைச்சுவை!
குடியுரிமை மறுக்கப்பட்டால் கைலாசா நாட்டுக்கு சென்றுவிடுவேன்… சீமான் நகைச்சுவை!

நித்யானந்தாவும் பதிலடி! 
தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் தன்னை இந்திய குடியுரிமையற்றவனாக்கி விட்டால் நித்யானந்தாவின் கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அக்கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில், சீமான் உரையாற்றினார்.அப்போது பேசுகையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் மூலம் குடியுரிமை மறுக்கப்பட்டால் ஒரு கவலையும் இல்லை எனக் கூறிய அவர், தங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருப்பதாக கூறினார்.



இதற்கு உடனடியாக தனது டிவீட்டரில் பதிலளித்துள்ள நித்தியானந்தா “ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால் சீமானுக்கு குடியுரிமை வழங்க தயார்!.
– பிரதமர் அலுவலகம், ஸ்ரீ கைலாஷ் எனத் தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...