வரலாற்றில் இன்று (11.07.2024)

 வரலாற்றில் இன்று (11.07.2024)

வரலாறு என்பது இறந்த காலத்தில் நிகழ்ந்த விஷயத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ளும் ஒன்றாகும். குறிப்பாக வரலாற்றில் ஒருவர் செய்த சாதனைகள், தியாகங்கள், சிறப்புகள் இதுபோன்ற பலவகையான முக்கிய விஷயங்கள் பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தும் விஷயமாகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் தங்கள் வாழும் காலத்தின் பின்னணியில் கடந்த காலத்தின் நிகழ்வுகளை விளக்கி வரலாறாக எழுதுகின்றனர். சரி இந்த பதிவில் நாம் நமது வாழ்வில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்களிலும் ஏதாவது ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம் அந்த  வகையில் வரலாற்றில் இன்று என்ன நாள்? என்பதை பற்றி நாம் நமது மின்கைத்தடியின் இந்த தொகுப்பில் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..

வரலாற்றில் இன்று | Today History in Tamil

சூலை 11 (July 11) கிரிகோரியன் ஆண்டின் 192 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 193 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 173 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1346 – லக்சம்பேர்க்கின் நான்காம் சார்ல்ஸ் புனித ரோமப் பேரரசன் ஆனான்.
157=6 – மார்ட்டின் புரோபிஷர் கிரீன்லாந்தைக் கண்டார்.
1735 – புளூட்டோ சூரியனுக்குக் கிட்டவாக ஒன்பதாம் இடத்தில் இருந்து எட்டாம் இடத்துக்கு இந்நாளில் வந்தாக கணித கணக்கீடுகள் தெரிவித்தன. இது பின்னர் 1979 இல் மீண்டும் நிகழ்ந்தது.
1740 – யூதர்கள் சிறிய ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
1750 – நோவா ஸ்கோசியாவின் ஹாலிஃபாக்ஸ் நகரத்தின் பெரும் பகுதி தீயில் அழிந்தது.
1776 – கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது கடற் பயணத்தை ஆரம்பித்தான்.
1796 – மிச்சிகனின் தலைநகர் டிட்ராயிட் நகரை பிரித்தானியாவிடம் இருந்து ஐக்கிய அமெரிக்கா “ஜே உடன்படிக்கை”யின் படி பெற்றுக் கொண்டனர்.
1811 – வளிமங்களின் மூலக்கூறுகள் பற்றிய தமது குறிப்புகளை இத்தாலிய அறிவியலாளர் அவகாதரோ வெளியிட்டார்.
1859 – இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்ல்ஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்.
1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் வாஷிங்டன் டிசியைத் தாக்க முயற்சித்தனர்.
1882 – பிரித்தானிய மத்தியதரைக் கடற்படையினர் எகிப்தின் அலெக்சாண்டிரியா நகர் மீது குண்டுத் தாக்குதலை ஆரம்பித்தனர்.
1893 – முதன் முறையாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்.
1895 – லூமியேர சகோதரர்கள் அறிவியலாளர்களுக்கு திரைப்படம் ஒன்றைக் காண்பித்தனர்.
1897 – வட முனைக்கு வாயுக்குண்டு மூலம் செல்லுவதற்காக சாலமன் அண்டிரே நோர்வேயின் ஸ்பிட்ஸ்பேர்ஜன் தீவிலிருந்து புறப்பட்டார். ஆனாலும் வாயுக்குண்டு தரையில் மோதியதில் அவர் கொல்லப்பட்டார்.
1921 – மங்கோலியா சீனாவிடமிருந்து விடுதலை பெற்றது.
1936 – நியூயோர்க் நகரில் டிறைபரோ பாலம் திறக்கப்பட்டது.
1943 – போலந்தில் வொல்ஹீனியா என்ற இடத்தில் நாசி ஜெர்மனியரினால் ஆயிரத்துக்கும் அதிகமான போலந்து மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1973 – பிறேசில் போயிங் விமானம் பாரிசில் விபத்துக்குள்ளாகியதில் 134 பேரில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1978 – ஸ்பெயினில் எரிவாயுவை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்று தீப்பிடித்ததில் 216 உல்லாசப் பயணிகள் உயிரிழந்தனர்.
1979 – ஸ்கைலாப் விண்வெளி நிலையம் பூமிக்குத் திரும்பியது.
1982 – இத்தாலி மேற்கு ஜெர்மனியை 3 – 1 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து உலக காற்பந்துக் கிண்ணத்தை வென்றது.
1987 – உலக மக்கள் தொகை 5 பில்லியனைத் தாண்டியது.
1990 – கொக்காவில் இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தகர்க்கப்பட்டது.
1991 – ஹஜ் பயணிகளை ஏற்றிச் சென்ற டிசி-8 விமானம் சவுதி அரேபியாவில் விபத்துக்குள்ளாகியதில் 261 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – வியட்நாமிற்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் முழுமையான தூதரக உறவுகள் ஆரம்பமாயின.
1995 – சேர்பிய இராணுவம் பொஸ்னிய நகரான சிரெப்ரென்னிக்காவைத் தாக்கியதில் 8,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
2006 – மும்பை இரயில் குண்டுவெடிப்புகள்: மும்பாயில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள செம்மசூதிக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வெளியேற்றும் முகமாக இராணுவத்தினர் மசூதியின் மீது தாக்குதல் நடத்தியதில் மசூதியின் மதகுரு அப்துல் காஸி உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – குடும்பிமலை புலிகளின் முகாம் வீழ்ச்சியடைந்தது.

பிறப்புகள்

1767 – ஜான் குவின்சி ஆடம்ஸ், ஐக்கிய அமெரிக்காவின் 6வது குடியரசுத் தலைவர் (இ. 1848)
1920 – வி. ஆர். நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (இ. 2000)
1925 – கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (இ. 2015)
1966 – பாலா, தமிழ் திரைப்பட இயக்குனர்

இறப்புகள்

1962 – பல்லடம் சஞ்சீவ ராவ் கருநாடக இசை புல்லாங்குழல் கலைஞர் (பி.1882)
1974 – பியார் லாஜர்க்விஸ்ட், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891)

சிறப்பு நாள்

உலக மக்கள் தொகை நாள்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...