குடியுரிமை சட்டம்…

குடியுரிமை சட்டம்… நெட்டிசன்களே உஷார், கண்காணிக்கிறது உளவுத்துறை!

     கொல்கத்தாவிலிருந்து கிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள அதே வேளையில், உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் இணையத்தள கண்காணிப்பு குறித்து சில உத்தரவுகளைப் பிறபித்துள்ளது.

  ஹைலைட்ஸ்

  • இணையத்திலோ குழுவிலோ கருத்துகளைப் பதிவிடச் செல்லும் முன் இதைக் கவனிக்கவும்…
  • போராட்டம் காரணமாக ரயில் சேவை நிறுத்தி வைப்பு!

    குடியுரிமை சட்டம் இயற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் வலுவடைந்து வரும் நிலையில் நெட்டிசன்களை தீவிர கண்காணிப்புக்குள் உட்புகுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், கொல்கத்தாவிலிருந்து கிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
    குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் முதலில் நிறைவேற்றிய மத்திய அரசு, அதன்பின் மாநிலங்களவையில் நிறைவேற்றியது. மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட அதே தினம் நள்ளிரவில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.

       இந்த குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்தவுடன் வடகிழக்கு மாநிலங்களான அஸாம், மேகாலயாவில் போராட்டங்கள் வெடித்தன. தொடர்ந்து, இப்போது போராட்டங்கள் விரிவடைந்து கேரளா, மேற்கு வங்காளம் உள்படத் தமிழ்நாட்டிலும் தொடங்கிவிட்டது.

    குடியுரிமை சட்டத்தின்படி அஸாம், அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் வசிக்கும் மக்கள் யாரை வேண்டுமானாலும் சட்ட விரோத குடியேறி என கூறிவிட முடியும் என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். இந்த சட்டம், இலங்கைத் தமிழர் உள்பட நம் நாட்டில் அறை நூற்றாண்டிற்கு மேல் வாழ்ந்து வரும் சிறுபான்மையினரின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் வகையில் உள்ளது.

   போராட்டத்தில் ஈடுப்பட்டபவர்களில் 5 பேர் காவல் துறையினரால் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், இப்போதும் அஸாம், டில்லி, மேகலயா மாநிலங்களீல் லட்சக் கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், அனைத்து மாநிலங்களிலும் இணையதள கண்காணிப்பை தீவிரப் படுத்தக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை மாநிலத் தலைமை அலுவலங்களுக்கும் அனுப்பியுள்ளது.

   அதன்படி, “போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமூக வலைதளங்களில் தேவையற்ற வதந்திகள், பொய் செய்திகளை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நெட்டிசன்களை கண்காணிப்பு வலையத்தில் வைத்திருங்கள். நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். வன்முறையைக் கையாளாமல் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது.

     இதனால், நெட்டிசன்கள் குடியுரிமை சட்டம் தொடர்பாக கருத்துகளையோ, பதிவுகளையோ , பகிர்வுகளையோ செய்தால், கவனமாகக் கையாள வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போராட்டங்கள் நடக்கும் மாநிலங்களுக்கு பெரும்பாலான ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

     மேற்கு வங்காளம் கொல்கத்தாவிலிருந்து கிழக்கு மாநிலங்களுக்குச் செல்லும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. போராட்டம் மாணவர்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வருவதால், என்ன செய்வெதன தெரியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இந்த சூழலில், போராட்டத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு முன் நின்று மேற்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!