மனிதநேயத்துடன் ​பொள்ளாச்சி அரசு மருத்துவர்கள்.!ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்​சை

 மனிதநேயத்துடன் ​பொள்ளாச்சி அரசு மருத்துவர்கள்.!ஆசனவாய் இல்லாமல் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்​சை

பொள்ளாச்சியை அடுத்த சுளீஸ்வரன்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் – மகேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு  இரண்டாவதாக கடந்த 13ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த அந்தக் குழந்தை, ஆசனவாய் பகுதியில் துவாரம் இல்லாமல் பிறந்துள்ளது.


பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவர்  இல்லாத காரணத்தினால் குழந்தையை  மட்டும் கோவை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். 


இந்த நிலையில், குழந்தையின் தந்தை மணிகண்டன் சனிக்கிழமை எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து மணிகண்டனின் உறவினர்கள், இரண்டாவது குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததால்தான் மணிகண்டன் உயிரிழந்ததாகக் கூறி, கோவை மருத்துவமனையிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

கணவன் இறந்த செய்தி கேட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கதறிக்கொண்டிருந்த மகேஸ்வரிக்கு இரண்டாவது குழந்தை கோவை மருத்துவமனையிலேயே அனாதையாக விடப்பட்ட செய்தி கேட்டு கதறி துடித்தார்.

இதனையடுத்து உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்குச் விரைந்த மகேஸ்வரியின் உறவினர்கள், யாருக்கும் தெரிவிக்காமல் குழந்தையை மீண்டும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கே தூக்கிக்கொண்டு வந்துள்ளனர். இனியும் காலதாமதம் செய்யாமல் குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் முடிவு செய்தனர்.அதன்படி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற மருத்துவர் கண்ணன் என்பவரின் உதவியை நாடியுள்ளனர்.


தனியார் ஸ்கேன் செண்டருக்கு குழந்தையை தூக்கிச் சென்று தேவையான ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரேக்களை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சையை தொடங்கினர். குழந்தையினுடைய ஆசன வாய்க்கு மேலிருக்கும் குடல் பகுதி சரியாக வளராமல் இருந்ததை மருத்துவர்கள் குழு கண்டறிந்தது. வயிற்றின் இடது புறத்தில் தற்காலிக துவாரம் ஏற்படுத்தி, அதனை குடலுடன் இணைத்து ஒன்றரை மணி நேரத்தில் “கொலாஸ்டமி” என்ற அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

பொள்ளாச்சி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் இந்த மனிதாபிமான செயல் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேநேரம், அவர்களின் வேண்டுகோளை ஏற்று இரவு நேரம் என பாராமல் உடனடியாக வந்து அறுவை சிகிச்சையை முடித்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓய்வுபெற்ற மருத்துவர் கண்ணனையும் பாராட்டி வருகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...