​BREAKING NEWS

 சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் பெட்ரோல் லிட்டர் ரூ.77.97க்கும், டீசல் ரூ.69.81க்கும் விற்பனை.

மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு – மல்லிகை பூ கிலோ ரூ.1700, முல்லை – ரூ.1500, அரளி – ரூ.350க்கும் விற்பனை.

ரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் பிஎஸ்எல்வி சி-48 மூலம் திட்டமிட்டபடி, நாளை பிற்பகல் 3.24 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் – திருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி.

பி.இ., படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும், 6 முதல் 8ம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம், என தமிழக அரசு அரசாணை. 

கடந்த 35 ஆண்டுகளாக இந்தியாவில் அகதிகளாக வாழும், 1 லட்சத்துக்கும் மேலான இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய அரசு குடியுரிமை வழங்க பரிசீலிக்க வேண்டும் – ஸ்ரீஸ்ரீரவிசங்கர் ட்வீட்.

குடியுரிமை சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நாளை தாக்கல்.

மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் இன்று தாக்கலாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

”நித்தியானந்தா மாதிரி தீவு வாங்கி, முதல்வராக மு.க.ஸ்டாலின் அறிவித்துக்கொள்ள வேண்டியதுதான்” -அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்.

 தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம் வட்டத்தில் உள்ள பனைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவி ஏலம்

ரூ.24 லட்சத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்  பதவி ஏலம், ஏலம் எடுத்தவரை தவிர யாரும் போட்டியிடுவதில்லை, என மக்கள் தீர்மானம்

மறைமுக தேர்தல் சட்டவிரோதமானதல்ல

மறைமுக தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம் சட்டவிரோதமானதல்ல

மறைமுக தேர்தலுக்கு எதிரான திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!